சிதிலமடையும் பள்ளி கட்டடம்: இடித்து அகற்ற மக்கள் கோரிக்கை | நாமக்கல் செய்திகள் | Dinamalar
சிதிலமடையும் பள்ளி கட்டடம்: இடித்து அகற்ற மக்கள் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:38

எருமப்பட்டி: எருமப்பட்டி ஒன்றியம், என்.புதுக்கோட்டை கிராமத்தில், 60ஆண்டுகளுக்கு முன் அரசு துவக்கப்பள்ளி கட்டப்பட்டது. இந்த பள்ளிக்கு அருகே, ஆசிரியர் குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. இதில், இந்த கிராமத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வந்தனர். இந்நி?லையில், பள்ளி கட்டடம் மிகவும் பழமையானதால், மூன்று ஆண்டுகளுக்கு முன், பள்ளிக்கு எதிரே புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு மாணவர்களுக்கு அங்கு பாடம் நடத்தப்படுகிறது. இந்நி?லையில், இந்த பழமையான பள்ளி வகுப்பறை கட்டடங்களில் உள்ள ஓடுகள் தற்போது கீழே விழுந்து பள்ளி முழுவதும் சிதலமடைந்து வருவதுடன் இரவு நேரங்களில் குடிமகன்கள் கூடாரமாக மாறி வருகிறது. இதனால், 'இந்த பழைய பள்ளி கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X