தொழிலதிபரை கடத்திய 5 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2021
04:23

விழுப்புரம்; சென்னை தொழில் அதிபரை கடத்திய சம்பவத்தில், மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் உட்பட ஐந்து பேரை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர்.சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் சிவன், 47; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். தொழில் ரீதியாக 18ம் தேதி நண்பர்கள் சென்னை வில்லிவாக்கம் ராஜேஷ்கண்ணன், 48; ஈக்காட்டுதாங்கல் சம்பத், 41; தெலுங்கானா மாநிலம், மந்திரியால் பரவர்த்தாலு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரா, 43; ஆகியோருடன் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்திற்கு காரில் வந்தார். அங்கு, புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த தனது நண்பர் வெங்கடேஷ், என்பவருடன் சிவன் தொழில் ரீதியாக பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, மதுரை திருப்பரங்குன்றம் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் நாகராஜ், என்பவர் சிவனுக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். தான் விழுப்புரம் பை பாஸ் சாலையில் உள்ள ஓட்டலில் இருப்பதாகவும், அங்கு வருமாறு நாகராஜ் அழைத்துள்ளார். இதை தொடர்ந்து, சிவன் தனது நண்பர்களுடன், ஓட்டலுக்கு சென்றார்.அங்கிருந்து, நாகராஜ் காரில் சிவன், ராஜேந்திரா ஆகியோரும், ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோர் சம்பத் காரிலும் கண்டாச்சிபுரம் நோக்கி சென்றனர். கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் காட்டுப்பகுதியில் சென்றபோது, டஸ்ட்டர் காரில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி சிவனை கடத்தினர். அப்போது, ராஜேந்திரா மற்றும் நாகராஜையும் அந்த கும்பல் காரில் ஏற்றிக்கொண்டு சென்றது.இது குறித்து ராஜேஷ்கண்ணா, கண்டாச்சிபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.இதையடுத்து, கடத்தல் கும்பபை பிடிக்கவும், சிவனை மீட்கவும் தனிப்படை அமைத்து டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டனர். விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., நல்லசிவம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், பிரபு, மருதப்பன், பாலசிங்கம் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.முதலில், விழுப்புரம் பை பஸ் சாலை ஓட்டல் மற்றும் கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன்பேரில், கார் பதிவு எண்களை கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட போலீசார் மற்றும் டோல்கேட்டுகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி சேலம் மேட்டுக்குடி டோல் கேட் அருகே ராஜேந்திராவை கடத்தல் கும்பல் இறக்கி விட்டு சென்றனர்.தகவலறிந்த தனிப்படை போலீசார் ராஜேந்திராவை மீட்டனர். இதை தொடர்ந்து, தனிப்படை போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த கடத்தல் கும்பல் சிவனை, நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியளவில் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவனை இறக்கி விட்டனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் சிவனை மீட்டு, மொபைல் போன் சிக்னல் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இந்நிலையில், கடத்தல் கும்பலை சேர்ந்த சென்னை திருநின்றவூர் நாச்சியார்சந்திரத்தை சேர்ந்த கார்த்திகேயன், 32; என்பவரை திருப்பூர் மாவட்ட போலீசார், தாராபுரத்தில் கடந்த 19ம் தேதி கைது செய்து, விழுப்புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்பேரில், கடத்தல் கும்பலை சேர்ந்த நாகராஜ், 53; திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த வீரமாத்தி தோட்டம் செந்தில், 47; மற்றும் இவரது மனைவி சத்தியா, 34; சென்னை திருநின்றவூர் லட்சுமிபுரம் செந்தில்நாதன், 42; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து இரண்டு கார்கள், துப்பாக்கி, மொபைல் போன் மற்றும் 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், நாகராஜிடம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு சிவன் இரிடியம் வாங்கித்தருவதாக கூறி ரூ.6 லட்சம் வாங்கியுள்ளார். இதையடுத்து, பணத்தையோ அல்லது இரிடியத்தையோ சிவன் கொடுக்கவில்லை. இந்த பணத்தை பெறுவதற்காக சிவனை கடத்தியது தெரியவந்துள்ளது.மேலும், கடத்தலில் ஈடுபட்ட செந்தில் என்பவர் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடத்தல், வழிப்பறி உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., ஆகியோர் பாராட்டினர்.பாக்ஸ்...1ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்நாகராஜ் கும்பல், சிவனை கடத்தி அவரது உறவினர்களுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, சிவனை விடுவிக்க ரூ.25 லட்சம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவ்வளது பணம் இல்லை சிவன் உறவினர்கள் கூறியுள்ளனர். பின், 5 லட்சம் வரை கேட்டும், இறுதியில் இருப்பதை வங்கி கணக்கில் செலுத்துங்கள் என கேட்டுள்ளனர். கடைசியில் ஒரு ரூபாய் கூட கிடைக்காததால், சிவனை விட்டுவிட்டனர்.பாக்ஸ்...2டம்மி துாப்பாக்கிசிவனை கடத்தும்போது, துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். அந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது, அந்த துப்பாக்கி, சிறுவர்கள் தண்ணீர் அடித்து விளையாடும் டம்மி என்பது தெரியவந்தது. இந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X