போதையில் அத்துமீறல் தெருவில் நடமாட அச்சம் | சென்னை செய்திகள் | Dinamalar
போதையில் அத்துமீறல் தெருவில் நடமாட அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஏப்
2021
05:00

தாம்பரம்- மது போதையில் அத்துமீறும் வாலிபர்கள் மீது, பீர்க்கன்காரணை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பீர்க்கன்காரணை பேரூராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டு, தேவநேசன் நகர், 2வது பிரதான சாலை, காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள, 20க்கும் மேற்பட்ட தெருக்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இதில், காமராஜர் நகருக்குட்பட்ட, கட்டபொம்மன் தெரு அருகே உள்ள, 'டாஸ்மாக்' கடையில், சட்டவிரோதமாக, 24 மணிநேரமும், மது விற்பனை நடப்பதாகவும், தேவநேசன் நகர் மயானத்தை ஒட்டிய பகுதிகளில், கஞ்சா விற்பனையும் கொடி கட்டி பறப்பதாகவும், அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இரவு நேரங்களில், போதை தலைக்கேறிய நிலையில் சுற்றித் திரியும் இளைஞர்கள், அவ்வழியே செல்லும், பெண்களை, கேலி செய்து, அவர்களிடம் அத்துமீற முயற்சிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், தேவநேசன் நகர், காமராஜர் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள், அச்சத்துடன் நடமாடும் சூழல் நிலவுகிறது.போலீஸ் உயர் அதிகாரிகள் தலையிட்டு, இதற்கு தீர்வு காண வேண்டும் என, பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X