'காவல் கரங்கள்' திட்டம் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2021
05:28

சென்னை--சென்னையில் ஆதரவற்ற நிலையில், பொது இடங்களில் தங்கியுள்ளவர்களை மீட்டு உதவ, 'காவல் கரங்கள்' என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார்.பின், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது:சாலைகளில் உள்ள, ஆதரவற்ற முதியோர், பெண்கள், சிறுவர்கள் குறித்து, முதியோர் உதவி மைய எண், 1253; பெண்கள் உதவி மைய எண், 1091; சிறுவர் உதவி மைய எண், 1098 மற்றும் காவல் கட்டுப்பாட்டறை, 100 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவல்களின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களுக்கு, காவல் கரங்கள் அமைப்பு உதவி செய்யும். மார்ச் 15ம் தேதி முதல், இதுவரை, 138 ஆதரவற்றோர் மீட்கப்பட்டு, அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhanasekar C. P. - Chennai,இந்தியா
22-ஏப்-202109:18:33 IST Report Abuse
Dhanasekar C. P. C. P. தனசேகர், சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை. ஆக்சிஜன் குறைவினால் மூச்சு தினறல் மற்றும் உயிரிழப்பு என்கிற அபாய செய்தி இந்த பெருந்தொற்று காலத்தில் தலைப்பு செய்தியாக பயமுறுத்துகிறது. வைரஸ் தாக்குதலுக்குள்ளானோர் காய்ச்சல், சளி, இருமல் என ஆரம்பித்து அதிதீவிர தொற்றாக மாறி நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு மூச்சுதினறல் ஏற்படுவது கொரோனாவின் பொதுவான தன்மை. ஒரு சிறு செடியை காற்று புகாதபடி ப்ளாஸ்டிக் கவரினால் மூடினாலே உயிர்காற்று கிடைக்கப் பெறாமல் அத் தாவரம் இறக்குமென்பது உயிரியலின் பாலபாடம். ஆரோக்கியமான சுவாசம் என்பது தூய்மையான காற்றை சுவாசிப்பது. ஆனால் ஒட்டுமொத்த மனித சமுதாயமே மணிக்கணக்கில், நாள்கணக்கில் அல்ல மாதக்கணக்கில் வருடக்கணக்கில் வாய் மற்றும் நாசித்துவாரங்களை மூட (மாஸ்க்) முகக்கவசம் அணிவதை நடைமுறையாக அல்லாமல் உடைமுறையாகவே மாறிவிட்ட இச்சூழலில், நாம் அனைவரும் சுத்தமான காற்றை சுவாசித்து போதுமான ஆக்சிஜன் பெறுகிறோமா? சராசரியாக அனைவருக்குமே ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கனிசமாக குறைந்திருக்குமென்பது உண்மையான இல்லையா? முகக்கவசம் அணிவது பாதுகாப்பு என்றாலும் ஆரோக்கியசீர்கேடு என்பதை யாராலும் மறுக்க முடியாது. சரி, பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆரம்பகால வழிமுறைகளை மட்டுமே பின்பற்றிக் கொண்டிருக்காமல், பின்வரும் முறைகளையும் முயற்ச்சிக்கலாம். 1, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப் படவேண்டும். இதை செய்தாலே தொற்றுடையோர் அடையாளம் காணப்பட்டு தனிமை படுத்துவதன் மூலம் பரவல் கட்டுக்குள் வந்துவிடும். 2, முகக்கவசத்தை கட்டாயப் படுத்தாமல் தனிநபர் இடைவெளியை தீவிரப்படுத்தலாம். இயற்கையான தூய்மையான உயிர்க் காற்றை சுவாசிப்பது உயிர் வாழ்வதற்காண உரிமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X