தீயெனப் பரவும் கொரோனாவை மாய்க்க 'தடுப்பூசி ஆயுதம்' ஏந்துவோம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2021
07:17

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது கொடிய வைரஸ் கொரோனா. 'ஜெட்' வேகத்தில் பாதிப்பும், கொத்து கொத்தாய் மரணமும் நேர்கிறது. இப்பெருந்துயரை துடைத்தெறிந்து நம்மை காக்கும் நம்பிக்கை வெளிச்சமாய் தடுப்பூசி கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. இது பாதுகாப்பானது என உலக வல்லுநர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர்.இருப்பினும் தடுப்பூசி பற்றிய வதந்திகளுக்கு வேலியிட முடியவில்லை. சமூக ஊடகங்கள் வழியே பரவும் இவ்வதந்திகளை நம்பிக்கொண்டு மக்கள் பலரும் தடுப்பு மருந்து ஏற்க தயங்குவதுதான் வேதனை. ''இப்பயம் தேவையற்றது. தடுப்பூசி ஒன்றே தற்போதைக்கு தீர்வு. யாரும் பயப்பட தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்' என டாக்டர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த பேட்டி விவரம்:தடுப்பூசிதான் பாதுகாப்பானது-எம்.சுகந்தி, தாசில்தார், நத்தம்.நான் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியிருக்கிறேன். ஊசி செலுத்திய அன்று மட்டும் சோர்வாக இருந்தது. ஓய்வுக்கு பின் எந்த பிரச்னையும் இல்லை. மக்கள் தடுப்பூசி செலுத்த பயப்பட வேண்டாம். டாக்டரின் ஆலோசனை பெற்று செலுத்திக் கொள்ளலாம். தற்போதைய அசாதாரண சூழலில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் மிகவும் பாதுகாப்பானது. அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.எந்தவித பாதிப்புமில்லைமுத்துலட்சுமி. இன்ஸ்பெக்டர், ஆயக்குடி


கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களும் செலுத்திக் கொண்டேன். பயப்படும்படியாக பக்கவிளைவுகள் ஏதுமில்லை. அதன்பின்பும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். உடல் ஆரோக்கியமாகவே உள்ளது. இதுவரை பணிவிடுப்பு கூட எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றுகிறேன். வரப்பிரசாதம் போன்று தடுப்பூசி வந்ததால், பொதுமக்களும் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதுவே நம்மை பாதுகாக்கும்.வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தினர்-விஜயலட்சுமி, கம்ப்யூட்டர் மைய உரிமையாளர், பழநி


கொரோனா தடுப்பூசி எனது அலுவலகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் செலுத்தி இருந்தனர். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் நானும் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். பிறர் கூறுவதுபோல எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விரைவில் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தி கொள்வேன். தடுப்பூசி செலுத்தினாலும், சமூகவிலகல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்கிறேன்.பாதுகாப்பாக உணர்கிறேன்பாண்டியம்மாள், பூங்கா பணி யாளர், கொடைக்கானல்.


கடந்த வாரம் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இருதினங்கள் டாக்டர்கள் ஓய்வில் இருக்க வலியுறுத்தினர். அதன்படி செயல்பட்டேன். எந்த அசவுகரியமும் எனக்கு ஏற்படவில்லை. பூங்காவில் பணியாளராக எப்போதும்போல என்னால் செயல்பட முடிகிறது. தடுப்பூசி என்பது அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றுதானே. இதன் மூலம் வழக்கம்போல் நமது பணியை மேற்கொள்ளலாம். பயப்பட தேவையில்லை.வதந்திகளை நம்பாதீர்கள்கு.சரண்யா, இல்லத்தரசி, ஒட்டன்சத்திரம்


நானும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளேன். இதுவரை எவ்விதமான பக்க விளைவுகளும் இல்லை. ஊசி போட்ட பின்பு காய்ச்சல், தலைவலி என எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. வழக்கம் போல் என்னுடைய வேலைகளை செய்கிறேன். வதந்திகளை பரப்புவதில் நேரத்தை செலவிடாமல், அருகிலுள்ளோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதே தொற்று பாதிக்காதிருக்க ஒரே தீர்வு.வதந்தியால் வேதனைபி.செல்வராணி, வட்டார ஒருங்கிணைப்பாளர், துாய்மை பாரத இயக்கம், வடமதுரை.


குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தினாலே காய்ச்சல் வரும் என்பது நாம் அறிந்ததே. இருந்தாலும் பெரிய நோய் வருவதை தடுக்கும் என்பதற்காக செலுத்திக் கொள்கிறோம். இதேபோன்று தான் கொரோனா தடுப்பூசியும். இதனால் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக சிலர் வதந்தி பரப்புவது கொடுமையாகவும், வேதனையாகவும் உள்ளது. இவ்விஷயத்தில் தடுப்பூசி நன்மைக்காக என்பதில் மக்கள் ஒருமித்த கருத்துடன் இருக்க வேண்டும்.ஓட்டளிப்பது போன்றதுபி.பத்மபிரியா, செவிலியர், வேடசந்துார் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் முதல் மற்றும் இரண்டாவது டோசை செலுத்திக் கொண்டேன். எனக்கு உடல் வலி, கைகால் வலி போன்ற எந்த பாதிப்பும் இல்லை. மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு நலம் பெற வேண்டும். தேர்தலில் ஓட்டளிப்பது எந்த அளவிற்கு உரிமை, கடமை என நினைக்கின்றோமோ, அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொள்வதையும் கருத வேண்டும்.அனைவரும் செலுத்த வேண்டும்-என்.அங்காள ஈஸ்வரி, இல்லத் தரசி, முளையூர்


நுாறு நாள் வேலைத் திட்டப் பணியை மேற்கொள்ளும் நானும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளேன். இதுவரை எந்த எதிர்மறை விளைவுகளும் வரவில்லை. உடல்நலம் நன்றாகவே உள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால்தான் தொற்று பரவ வாய்ப்பிராது. எனவே நமது நாட்டின் நலன் கருதியாவது அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம். புறக்கணிப்பது மூடத்தனமேஆர்.ராஜலட்சுமி, இல்லத்தரசி, செம்பட்டி:கோவிட் தடுப்பூசி 2 டோஸ்களும் எடுத்துக் கொண்டேன். எந்த பிரச்னையும் இல்லை. மக்கள் நல திட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்ப்பது தவறு. பல ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பூசி வழங்கியிருந்தால், இதற்கு எதிர்ப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை. இலவச பொருளால் சாதாரணமாக கருதுகின்றனர். கடந்தாண்டு கொரோனா பாதித்தவர்களின் அவதியை அறிந்தவர்கள் இதனை எதிர்க்க மாட்டார்கள். இதனை புறக்கணிப்பது மூடத்தனம்.தடுப்பூசியே சிறந்த வழிஜெயலட்சுமி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர், வத்தலக்குண்டு


எங்கள் குடும்பத்தில் நான்கு பேரும் கொரோனா தடுப்பூசி இரண்டு முறை எடுத்துக் கொண்டோம். தடுப்பூசி செலுத்திய பிறகு உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. நன்கு சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. நாட்டின் பொருளாதாரத்தைக் காக்கவும், நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கவும், உயிர் பயத்தை போக்கவும் மத்திய மாநில அரசுகளால் இலவசமாக வழங்கப்படும் தடுப்பு ஊசியே மிகச் சிறந்த வழியாகும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X