தடுப்பூசியே நாம் தப்பிக்க ஒரே ஆயுதம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2021
10:08

'கொரோனா தடுப்பூசி குறித்து, எந்த அச்சமும் தேவையில்லை. கொரோனா எனும் கொடிய அரக்கனை எதிர்கொள்ள, தடுப்பூசி மட்டுமே நமக்கான ஒரே ஆயுதம்' என, தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் தெரிவித்தனர்.



இது குறித்து, தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் அளித்த பேட்டி:


கவச குண்டல தடுப்பூசி: தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று, இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதை தடுக்க அரசு, இலவசமாக கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற தடுப்பூசிகளை வழங்கி வருவதை அறிந்து, நானும் என், 58 வயதான மனைவி வளர்மதியும், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு கட்டமாக, கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டோம். இதில், எங்களுக்கு எந்தவித உடல் உபாதையும் ஏற்படவில்லை. தற்போது, நாங்கள் கொரோனா தொற்று அச்சமின்றி நிம்மதியுடன் உள்ளோம். பொதுமக்கள், கொரோனா தடுப்பூசி குறித்து வரும், வீண் வதந்திகளை நம்பி, தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல், கொரோனா பிடியில் சிக்க வேண்டாம். நமது உயிரை காக்கும் கவச குண்டலமாக உள்ள கொரோனா தடுப்பூசியை, எங்களை போன்று பொதுமக்கள் அச்சமின்றி போட்டுக் கொண்டு, உயிரை பாதுகாத்து கொள்ள வேண்டும்.


ஜி.கிருஷ்ணன், 68, பாரதிபுரம், தர்மபுரி.


லேசான காய்ச்சல்: கொரோனா தொற்றிலிருந்து என்னை பாதுகாத்துக் கொள்ள குடும்பத்தினரின் அறிவுரையின்படி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதல்கட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். ஊசி போட்டு சிறிது நேரத்தில் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின், 20 நிமிடங்களில் காய்ச்சல் போய் விட்டது. தொடர்ந்து, எந்த உடல் உபாதையும் ஏற்படாததால், வழக்கமான என் பணியை தொடர்ந்ததுடன், கடந்த சில தினங்களுக்கு முன், இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியையும் போட்டுக் கொண்டேன். இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டபோது, காய்ச்சல் கூட வரவில்லை.


டி.தயாளன், 50, குமாரசாமிபேட்டை, தர்மபுரி.


வதந்தியை நம்ப வேண்டாம்: கடந்த சில நாட்களாக உடல்நலத்தில் மாற்றம் தெரிந்ததால், கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது. இருந்தும், கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என, டாக்டர்கள் கூறினர். அவர்களின் அறிவுரையின்படி கோணங்கிநாயக்கனஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தடுப்பூசி போடும் முன் சில உறவினர்கள், தடுப்பூசி போட்டு கொண்டால் உடல் நலம் பாதிக்கும் என, எங்கள் குடும்பத்தினரிடம் வதந்தி பரப்பினர். ஆனால், தடுப்பூசி போட்டபின் எவ்வித பாதிப்பும் ஏற்படாததால், அந்த பயம் என்னை விட்டு விலகியது. இதனால், இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.


து.சென்னம்மாள், 50, கோணங்கிநாயக்கனஹள்ளி.


அச்சம் வேண்டாம்: உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கொரோனா தொற்று பாதிக்கும் என்பது குறித்த விழிப்புணர்வை அறிந்த என் குடும்பத்தினர், என்னை, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினர். இதையடுத்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தடுப்பூசி போட சென்றபோது, டாக்டர்கள், ஊசி போடும் முன் என் உடல் நலத்தை பரிசோதித்து, தடுப்பூசி போட்டனர். மேலும், தடுப்பூசி போட்ட பின், இரண்டு மணி நேரம் கண்காணித்து, வீட்டுக்கு அனுப்பினர். எனவே, பொதுமக்கள், அச்சமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதனால், எந்தவித பாதிப்பும் எனக்கு ஏற்படவில்லை.


எம்.ஜெயராமன், 68, பிடமனேரி, தர்மபுரி.


நலமாக இருக்கிறேன்: நான் கடந்த, 18ல், அரூர் அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். ஊசி போட்ட பின், வலி, உடல்சோர்வு உள்ளிட்ட எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. வழக்கம்போல், இயல்பாக என் பணிகளை செய்து வருவதுடன், முழு நலத்துடன் உள்ளேன். வதந்திகளை நம்பாமல், மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும், மருத்துவர்களின் அறிவுரைபடி, இரண்டாம் கட்ட தடுப்பூசி போடவுள்ளேன்.


எ.முத்துமாணிக்கம், 75, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், அரூர்.


லேசான உடல் வலி: நான் கடந்த, 13ல், அரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். முதல் இரண்டு நாட்கள், உடலில் லேசாக வலி இருந்தது. மருத்துவமனையில் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட பின், வலி சரியாகி விட்டது. அதன்பின், எந்த பிரச்னையும் இல்லை. கொரோனாவுக்கு சிறந்த பாதுகாப்பு தடுப்பூசி மட்டுமே என்பதால், எங்களது குடும்பத்தில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டோம்.


எஸ்.பாண்டுரங்கன், 57, தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர், அரூர்.


தடுப்பூசி அவசியம்: முன்பிருந்த கொடிய நோய்களான பெரியம்மை, காசநோய், தொழுநோய் போன்றவற்றுக்கு அரசு சிகிச்சை அளித்து, அறவே இந்த நோய்களை ஒழித்துள்ளது. அதே முறையில் தற்போது மக்களை அச்சுறுத்தும் கொரோனாவுக்கும் தடுப்பூசி வழங்கி வருவதை உணர்ந்து, நான், என்னை கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொண்டேன். இதனால், எனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.


பொ.செந்தில்குமார், 38, உதவி பேராசிரியர், பாப்பிரெட்டிப்பட்டி.


விளம்பர தூதராக மாறினோம்: தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனாவை தடுக்க வழங்கப்படும், இரு வகையான தடுப்பூசிகளும் பாதுகாப்பானதாகும். நானும், என் குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது, ஒரு சிலருக்கு கோவிஷீல்டும், மற்றவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும், இரு கட்டமாக போடப்பட்டது. இதனால், எங்களுக்கு எந்த பக்க விளைவும் ஏற்படாததால், தற்போது கொரோனா பாதிப்பு அச்சமின்றி, முழு ஆரோக்கியத்துடன் உள்ளோம். இதனால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, இலவச விளம்பர தூதராக மாறியுள்ளோம்.


எல்.சிவக்குமார செந்தில்நாதன், 38, இன்ஜினியர், பென்னாகரம்.


- நமது நிருபர் குழு -


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X