கொசு மருந்தில் ரூ.89 லட்சம் ஊழல் அதிகாரி உட்பட 6 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2021
23:39

மதுரை:மதுரை மாநகராட்சியில், வாங்காத கொசு மருந்துக்கு, 'பில்' தயாரித்து, 89 லட்சம் ரூபாய் சுருட்டிய, 'மாஜி' நகர்நல அலுவலர், உதவி நகர்நல அலுவலர் உட்பட ஆறு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.



மதுரை மாநகராட்சியில், 2012 ஜூன் முதல், 2018 ஜூலை வரை, கொசு மருந்து வாங்கியதில் பெருமளவு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.அதிர்ச்சி தகவல்லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தற்போது முழு விசாரணை முடிந்த நிலையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.



டெங்கு காய்ச்சலை காரணம் காட்டி, அவ்வப்போது கொசு ஒழிப்பு மருந்து வாங்க, அப்போதைய சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள், 'தனி பட்ஜெட்' போட்டுள்ளனர்.ஆனால், மருந்து வாங்காமலேயே, தனியார் நிறுவனம் பெயரில் போலி பில் தயாரித்தனர். இதன்படி, 88.88 லட்சம் ரூபாய்க்கு, 13, ஆயிரத்து, 950 லிட்டர் கொசு மருந்து வாங்கியதாக, மாநகராட்சியிடம் கணக்கு காண்பித்து, நிதி ஒதுக்கீடு பெற்று, பணத்தை சுருட்டினர்.



இதில், முன்னாள் நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன், உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், மாநகராட்சி மத்திய சுகாதாரப்பிரிவு, ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் மாலினி, 62, உதவி அலுவலர் குணசேகரன், 53, ஓய்வு பெற்ற எழுத்தர் அப்துல் கரீம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.



உடந்தையாக இருந்த, சென்னை, அசோக் நகரைச் சேர்ந்த ராமமூர்த்தியும் சிக்கினார். இவர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.



சிக்கிய பொறியாளர்





மதுரை, திருப்பாலையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மணிமுத்தாறு மண்டல சருகணி கால்வாய் பாசன பொறியாளராக உள்ளார்.மதுரை மண்டலத்தில், 2011 - 18 வரை பணிபுரிந்தபோது தன் பெயரிலும், மனைவி ராஜேஸ்வரி பெயரிலும், 1.03 கோடி ரூபாய் மதிப்புள்ள, 66 சொத்துகளை வாங்கியதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தியதில் உண்மை எனத் தெரிந்தது. அவர் மீதும், மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



சுப்பிரமணியன் வீடு, பண்ணை வீட்டில் சோதனை நடத்தி, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விரைவில் அவரது வங்கி, 'லாக்கர்'களையும் சோதனையிட உள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X