பிஷப் உட்பட 4 பேர் மீது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பிஷப் உட்பட 4 பேர் மீது
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
00:15

கோவை:சி.எஸ்.ஐ., ஆலயங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பி.எப்., தொகையில், 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார்படி, பிஷப் உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.



கோவை, வெள்ளலுார், சி.எஸ்.ஐ., ஐக்கிய ஆலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜெர்யோம் ஜேக்கப் என்பவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கோவை, சி.எஸ்.ஐ., திருமண்டலத்துக்கு சொந்தமான, 125 ஆலயங்களில், பாதிரியார்கள் உட்பட பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.



நான், 2005ம் ஆண்டு முதல், சி.எஸ்.ஐ., ஆலய நிர்வாகத்தின் கீழ் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளேன். 2005ம் ஆண்டு முதல் தற்போது வரை, என் கணக்கில் பி.எப்., தொகையை செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். நான், 2019ல் கேள்வி கேட்ட பின், புதிய கணக்கை துவங்கி, 45 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தியுள்ளனர். இதுபோன்று, 125 ஆலயங்களில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த நிதி, 25 கோடி ரூபாயை செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர்.



இந்த மோசடிக்கு, பிஷப் திமோத்தி ரவீந்தர், முன்னாள் செயலர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ், பொருளாளர் செல்வகுமார் உள்ளிட்டோரே காரணம்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். சி.எஸ்.ஐ., பிஷப் திமோத்தி ரவீந்தர் உட்பட நான்கு பேர் மீது கூட்டு சதி, நம்பிக்கை மோசடி உட்பட மூன்று பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X