கோவை கலெக்டர் அலுவலகம் ஜப்தி செய்ய, நீதிமன்றம் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
00:20

கோவை:நில ஆர்ஜித வழக்கில், கோவை கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது.



கோவை மாவட்டம், பன்னிமடை, கோட்டை தோட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி அம்மாள், 90. கோவை, கணபதியில் இவருக்குச் சொந்தமான நிலத்தை, 1983ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது.சார்பு நீதிமன்றம்நிலத்துக்கு அரசு நிர்ணயித்த விலை குறைவாக இருந்ததால், அதிக தொகை வழங்க கோரி, கோவை முதன்மை சார்பு நீதிமன்றத்தில், சரஸ்வதி வழக்கு தாக்கல் செய்தார்.



சரஸ்வதி அம்மாளுக்கு, சென்ட்டுக்கு 6,000 ரூபாய் வீதம் வழங்க, 2005ல் நீதிமன்றம் உத்தர விட்டது. இதை எதிர்த்து, வீட்டு வசதி வாரியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கீழ் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி, சரஸ்வதி அம்மாளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. 'வீட்டு வசதி வாரியம், வட்டியுடன் சேர்த்து, 67.8 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை, மனுதாரர் பெயரில், 2021, மார்ச், 31க்குள் டிபாசிட் செய்ய வேண்டும்' என, உத்தரவில் குறிப்பிடப்பட்டது.



இழப்பீடு வழங்காமல், வீட்டு வசதி வாரியம் காலதாமதம் செய்து வந்ததால், சரஸ்வதி அம்மாள் சார்பில், கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.விசாரித்த நீதிபதி செல்லதுரை, கோவை கலெக்டர் வளாகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட கருவூலம் ஆகிய அலுவலகங்களில் உள்ள மேஜை, நாற்காலி, பீரோ. மின் விசிறி மற்றும் ஜீப், கார் உள்ளிட்ட, 13 வகையான பொருட்களை ஜப்தி செய்யவும், கோவை வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை பூட்டி, 'சீல்' வைக்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜூன், 2க்கு ஒத்தி வைத்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X