நுால் விலை கடும் உயர்வு எதிரொலி: பனியன் விலை மேலும் உயர்கிறது! உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 ஏப்
2021
02:12
பதிவு செய்த நாள்
ஏப் 23,2021 00:38

திருப்பூர்;கடந்த ஜனவரியில், 10 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், நுால் விலை அபரிமித உயர்வை கருத்தில் கொண்டு, பனியன்(ஆயத்த ஆடை) விலை மேலும் 15 சதவீதம் உயர்த்தப்படுவதாக, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா) அறிவித்துள்ளது.



திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் பிரதான மூலப்பொருளான ஒசைரி நுால் விலை, கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதனால், உற்பத்தி செலவு அதிகரிப்பு; ஆடைகளுக்கு விலை நிர்ணயிப்பதில் சிக்கல் என, பின்னலாடை நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன.


நுால் விலை உயர்வு குறித்து விவாதிப்பதற்காக, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) மகாசபை கூட்டம், நேற்று மாலை நடந்தது. தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அபரிமித நுால் விலையால் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் குறித்து, பலரும் கருத்துகளை முன்வைத்தனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தமிழக நுாற்பாலைகள், ஒசைரி நுால் விலையை உயர்த்திக்கொண்டே செல்கின்றன. இதனால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துவருகிறது. கடந்த ஜனவரி மாதம், ஆயத்த ஆடை விலையில், 10 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. மூலப்பொருள் விலை உயர்வால், ஆடை விலை மேலும் 15 சதவீதம் உயர்த்தப்படுகிறது.உறுப்பினராக உள்ள அனைத்து நிறுவனங்களும், உள்நாட்டு சந்தைக்காக தயாரிக்கும் அனைத்துவகை ஆடை ரகங்களுக்கும், விலையை உயர்த்தி நிர்ணயிக்கவேண்டும்; ஒற்றுமையை கடைபிடிப்பதன் மூலம், தடையின்றி விலை உயர்வு பெறலாம்.இவ்வாறு, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.துணை தலைவர் கோவிந்தப்பன் நன்றி கூறினார்.


டில்லி செல்ல திட்டம்வரும் மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதன்பின், திருப்பூர் பின்னலாடை சங்கத்தினர் ஒன்றிணைந்து, டில்லி சென்று மத்திய அரசு நுால் விலையை கட்டுப்படுத்துவது குறித்து கோரிக்கை விடுக்க வேண்டும்; இதேபோல், மாநில அரசிடமும் கோரிக்கை வைக்கப்படும் என்று 'சைமா' நேற்று தீர்மானம் நிறைவேற்றியது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஏப்-202123:32:45 IST Report Abuse
Ram Pollachi சந்தோஷம் உனக்கு ஒரு கும்பிடு தம்பி! பட்டாபட்டிக்கு மவுசு அதிகமாகும் போது உங்க சரக்கு விலை இறங்கும் பார்!
Rate this:
Cancel
23-ஏப்-202123:19:16 IST Report Abuse
Ram Pollachi பட்டாபட்டியின் அருமை இப்போது தான் பலருக்கு புரிந்துள்ளது. உள்ளாடையில் நீங்கள் செய்யும் அநியாயம் தாங்க முடியவில்லை. 90cm வாங்கி போட்டால் அப்பனுக்கு பத்தவில்லை மகனுக்கு தான் சரியா இருக்கு. பெண்கள் நிலை மிகவும் பரிதாபம். தொழிலில் நேர்மை இல்லை ஆக உன்னை சொல்லி குற்றமில்லை.
Rate this:
Cancel
23-ஏப்-202107:52:27 IST Report Abuse
ஆப்பு வீட்டிலேதானே முடங்கி இருக்காங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X