கோவையில் சிக்கிய கள்ள நோட்டு கும்பல்: மேலும் இருவரை கைது செய்து விசாரணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
01:13

கோவை:கோவையில் ஜெராக்ஸ் மெஷின் மூலம் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பலை சேர்ந்த மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.கேரளா மற்றும் கோவையில், 2,000 ரூபாய் கள்ள நோட்டுக்களை சிலர் புழக்கத்தில் விடுவதாக கொச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை அமைத்து விசாரித்த கேரளாபோலீசார் நேற்று முன்தினம் கோவை வந்தனர்.கரும்புக்கடை, வள்ளல் நகரை சேர்ந்த அஷ்ரப், 24 என்பவரிடம் விசாரித்து, அவரது வீட்டில் சோதனையிட்டனர். தொடர்ந்து அவர்அளித்த தகவலின்பேரில் உக்கடம், அல்-அமீன் காலனியை சேர்ந்த செய்யது சுல்தான், 32 வீட்டிலும் கேரளா மற்றும் தமிழக போலீசார் இணைந்து சோதனையிட்டனர்.சோதனையில், 1.80 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் கட்டு, கட்டாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின், இருவரையும் குனியமுத்துார் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர்.விசாரணையில், கள்ள நோட்டு அடிக்க திட்டமிட்ட செய்யது சுல்தான், மூன்று மாதங்களுக்கு முன் ஜெராக்ஸ் மெஷின் வாங்கியுள்ளார். 2,000 ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டுக்களை அச்சடித்துள்ளார்.கள்ள நோட்டுக்களை கேரளா மற்றும் கோவையில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் புழக்கத்தில் விட்டுள்ளார். இதற்கு அஷ்ரப் மட்டுமல்லாமல் கரும்புக்கடையை சேர்ந்த முகமது ரியாஸ், 30, அசாருதீன் ஆசித்னா 28, உட்பட மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதைதொடர்ந்து நேற்று காலை கரும்புக்கடை பகுதிக்கு விரைந்த இரு மாநில போலீசார், முகமது ரியாஸ் மற்றும் அசாருதீன் ஆசித் ஆகிய இருவரையும் கைது செய்தனர். நான்கு பேரிடமும் இரு மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த கோவையை சேர்ந்த மேலும் ஒரு வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.வாக்காளருக்கு கள்ள நோட்டு?ஜெராக்ஸ் மெஷின் மூலம் கள்ள நோட்டுக்களை அச்சடித்த கும்பல், அதை புழக்கத்தில் விடுவதற்கு தேர்தல் நேரத்தை பயன்படுத்தியுள்ளனர். அந்த நேரத்தில் பொதுமக்களை கவர கட்சியினர் பணத்தை பல வகைகளில் வாரி இறைத்தனர். இதை பயன்படுத்தி இந்த கும்பல் கள்ள ரூபாய் நோட்டுக்களை கேரளா மற்றும் தமிழகத்தில் புழக்கத்தில் விட்டுள்ளனர். இவர்கள் கட்சி பிரமுகர்களிடம் 'டீல்' பேசி, ஒரிஜினல் ரூபாய் நோட்டுக்களை வாங்கி கொண்டு, கள்ள ரூபாய் நோட்டுக்களை மக்களிடம் கொடுத்தார்களா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. தேர்தல் நேரத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்களை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இந்த கும்பல் புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X