கணவன் தற்கொலை மனைவியும் மர்ம சாவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
04:20

புதுச்சேரி; லாஸ்பேட்டையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியும் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். புதுச்சேரி, லாஸ்பேட்டை ஆனந்தாநகரை சேர்ந்த கார் டிரைவர் தனசேகர், 43; இவரது மனைவி சந்திரகுமாரி, 35; இவர்களுக்கு மகள் பாவனா, 15; கார்கேஷ், 11; என்ற பிள்ளைகள் உள்ளனர். தனசேகரின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.சந்திரகுமாரியின் அண்ணன் சந்திரசேகர், தனது மகள் காதணி விழாவை மயிலம் கோவிலில் நேற்று நடத்தினார். இதற்கு தங்கை சந்திரகுமாரி, தங்கையின் கணவர் தனசேகரை நேற்று மாலை 3:30 மணி அளவில் வீட்டிற்கு சென்று அழைத்தார். அவர்கள் குழந்தைகளை மட்டும், சந்திரசேகருடன் அனுப்பி விட்டு, தாங்கள் பிறகு வருவதாக கூறினர். ஆனால், இருவரும் வரவில்லை. விழா முடிந்த பிறகு குழந்தைகளை விட தங்கை சந்திரகுமாரி வீட்டிற்கு இரவு 7:30 மணியளவில் சந்திரசேகர் வந்தார். வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. வெளியே இருந்து அழைத்தும், யாரும் கதவை திறக்கவில்லை.சந்தேகமடைந்த சந்திரசேகர், உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, தனசேகர் துாக்கில் தொங்கிய நிலையிலும், அவரது கால் சந்திரகுமாரியின் கழுத்தில் மிதித்த நிலையிலும் இறந்து கிடந்தனர். இதனால், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், தனசேகர் மனைவியை அடித்து கொலை செய்து, துாக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. லாஸ்பேட்டை போலீசார் சென்று, உடல்களை மீட்டு, கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X