மகள் திருமணத்திற்கு வந்த தந்தை மாயம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மகள் திருமணத்திற்கு வந்த தந்தை மாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
04:29

கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அருகே மகள் திருமணத்திற்கு வந்த தந்தை திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஏழுமலை 45. இவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை வண்ணாரபேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது மகள் பிரியதர்ஷினிக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.வரும் 26 ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற ஏழுமலை மீண்டும் வீடு திரும்பவில்லை.கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X