தீவிரம் : ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை...சுழற்சி முறையில் ரயில்வே பாதுகாப்பு படை கண்காணிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
04:34

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்கம் அதிகரிப்பதை யொட்டி, ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.



விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதையொட்டி, மாவட்ட காவல் துறை, சுகாதாரம் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்வோரை கண்காணித்து, வழக்குப் பதிந்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் மத்தியில் கொரோனா விதிமுறை மற்றும் கட்டுபாடுகளை கடைபிடித்தல் சம்பந்தமாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொரோனா நோய் தாக்கத்தை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், மீறினால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.விழுப்புரம் ரயில் நிலையத்தில் கடந்தாண்டு மார்ச் மாதத்திற்கு முன் தினந்தோறும் தென்மாநிலம் மற்றும் வடமாநிலத்திற்கு 100 ரயில்களுக்கு மேல் இயக்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா தாக்கத்தால் ரயில் போக்குவரத்து ரத்தாகியது. மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கிய நிலையில் குறைந்தளவாக தற்போது 40 ரயில்கள் மட்டுமே விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது. .இங்கு பயணிகள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பயணிக்கிறார்களா என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சுழற்சி முறையில் பத்து பேர் என தினந்தோறும் விழுப்புரம் ரயில் நிலையம் பிளாட்பாரங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதோடு, இவர்களுக்கு ரயில்வே போலீசாரும் ஒத்துழைப்பு வழங்கி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்து ரயில் நிலையத்திற்குள் போலீசார் அனுமதிக்கின்றனர்.



ரயில் வரும் நேரம் வரை பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பிளாட்பாரங்களில் அமர அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த நான்கு தினங்களாக இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தாலும், பயணிகள் தங்களை காத்து கொள்ளும் முயற்சியில் தீவிர விழிப்புணர்வோடு இருப்பதால் போலீசார் இதுவரை வழக்குப் பதியவில்லை.விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு,



அதற்கான அறிக்கைகளை ரயில் நிலைய அதிகாரிகள் மூலம் தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவருகின்றனர்.அது மட்டுமின்றி, ரயில் நிலையம் தினந்தோறும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, பயணிகள் கைகளை சுத்தம் செய்துகொள்ள சானிடைசர் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X