தி.மு.க., கொடி கம்பம் சேதம்: இருவர் கைது | கடலூர் செய்திகள் | Dinamalar
தி.மு.க., கொடி கம்பம் சேதம்: இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
04:47

பண்ருட்டி; பண்ருட்டி அருகே தி.மு.க., கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த முத்தாண்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 43; இவரது வீட்டின் முன் கடை கட்டி வருகிறார். அங்கு இடையூறாக இருந்த தி.மு.க., கொடிகம்ப சிமென்ட் கட்டையை அகற்ற தி.மு.க., பிரமுகர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் அகற்றவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவக்குமாரும், இதே பகுதியைச் சேர்ந்த செல்வம், 36; என்பவரும் சேர்ந்து கொடிக்கம்ப சிமென்ட் கட்டையை சேதப்படுத்தினர்.இதனைத் தட்டிக்கேட்ட, தி.மு.க., கிளைச் செயலாளர் கோதண்டராமனை, 35; தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.கோதண்டராமன் கொடுத்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமார், செல்வம் ஆகியோரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X