செய்திகள் சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
04:47

கொரோனா வார்டுக்கு எதிர்ப்பு



ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையின் முன் பகுதியில் காய்ச்சல் சிகிச்சை பிரிவு, காசநோயாளிகள் சளி பரிசோதனை பிரிவு உள்ளது. பொதுவாக இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் நிற்பார்கள். இந்நிலையில் இங்கு 20 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை பிரிவு துவக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே ஏற்கனவே அமைக்கப்பட்ட வார்டுகளில் கொரோனா சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்களும், டாக்டர்களும் தெரிவித்துள்ளனர்.



ஊரடங்கு ஆலோசனை



கீழக்கரை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஏப்.,25ல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கில் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) எம். பூபதி தலைமை வகித்தார். வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், அனைத்து ஜமாத் நிர்வாகிகள், திருமண மண்டப உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஞாயிறு முழு ஊரடங்கால் சனிக்கிழமை பொதுமக்கள் அதிகமாக கூடுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.



ரூ.50 ஆயிரம் அபராதம்



திருவாடானை: திருவாடானை தாலுகா மண்டல துணை தாசில்தார் சேதுராமன் தலைமையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணிகள் நடக்கிறது. ஏப்.,12 முதல் முதல் எஸ்.பி.பட்டினம், தொண்டி, சின்னக்கீரமங்கலம் உள்ளிட்ட செக்போஸ்ட்களில் வாகனங்களை வழிமறித்து சோதனை நடத்தினர். 10 நாட்களில் ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூலாகியுள்ளது.



ஆலோசனை கூட்டம்



கடலாடி: மே 2 ஓட்டு எண்ணிக்கையையொட்டி கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஓட்டு எண்ணும் முகவர்களின்ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் சேகர் தலைமை வகித்து கூறுகையில், ''ஓட்டு எண்ணும் மையத்திற்கு முகவர்கள் வரும்போது அலைபேசி, பேனா உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஏப்., 30ல் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். நோயில்லை என சான்றுகள் அவசியம் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிக்காட்டுதல்கள் விளக்கப்பட்டது. இதில் அனைத்து வேட்பாளர்களின் முகவர்களும் கலந்துகொண்டனர்.



வசூல் குறைவு: பஸ் நிறுத்தம்



திருவாடானை: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திருவாடானை, தொண்டி பகுதிகளில் முகூர்த்த நாட்களைதவிர பிற நாட்களில் கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களில் ஐந்து முதல் பத்து பேர் பயணிக்கின்றனர். இதனால் சில டவுன் பஸ்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அரசு போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், ''திருவாடானையிலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சில டவுன் பஸ்களில் டீசல் செலவிற்கு கூட வசூல் இல்லாமல் பெரும்நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்கட்டமாக திருவாடானையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு செல்லும் எண்.21 டவுன்பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சில பஸ்களை நிறுத்த ஆலோசித்து வருகிறோம்'' என்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X