உடைமைகள் திருட்டு: நகராட்சி அலுவலகத்தில் கைவரிசை | சென்னை செய்திகள் | Dinamalar
உடைமைகள் திருட்டு: நகராட்சி அலுவலகத்தில் கைவரிசை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
05:14

பம்மல்-பம்மல் நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்களின் உடைமைகள் திருடப்படுவதால், நகராட்சிக்கு வருவதற்கு மக்கள் பயப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் நகராட்சி, 21 வார்டுகளை கொண்டது. பம்மல் - பொழிச்சலுார் சாலையில், நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது.நாள்தோறும், நுாற்றுக்கணக்கான மக்கள், நகராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். அப்படி வருபவர்கள், அங்குள்ள வாகன நிறுத்தத்தில், தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். அதிகாரிகளை சந்தித்து விட்டு, திரும்பி வரும் போது, தலைக்கவசம், கண்ணாடி, வாகனங்களில் வைக்கப்படும் பொருட்கள், பை உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலன் இல்லை என புலம்புகின்றனர். இதனால், நகராட்சிக்கு வருவதற்கே மக்கள் பயப்படுகின்றனர். இந்த விவகாரத்தில், நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X