ஊரடங்கை மீறினால் வாகனம் பறிமுதல்; போலீஸ் 24 மணி நேரமும் ரோந்து!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
05:19

சென்னையில், ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால், வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல்துறை எச்சரித்துள்ளது.



கடற்கரைக்கு மக்கள் வருவதை தடுக்க, மெரினா முதல் கானத்துார் வரை, 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.போலீஸ் தீவிரம்சென்னையில் தினசரி, கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 3,000 என்ற நிலையில் உள்ளது. 30 ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மாநகராட்சி, சுகாதாரத்துறையுடன், சென்னை காவல்துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது. அதன்படி, போக்குவரத்து சிக்னல்களில், முககவசம் அணியாத நபர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், கபசூர குடிநீர் வழங்குவது, தடுப்பூசி போட்டு கொள்ள வலியுறுத்துவது போன்ற பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.தொற்று பரவலை தடுக்க, தமிழகம் முழுதும், இரவு, 10:00 மணி முதல் அதிகாலை. 4:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகள் தோறும், முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது, பால், செய்தி தாள் வினியோகம், மருத்துவ சேவைகள் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு நேர ஊரடங்கு துவங்கப்பட்ட முதல் நாளில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலைகளில் சுற்றிய, 22 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். முதல் நாள் என்பதால், கண்டிப்புடன் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப் பட்டன.தப்பிக்க வழிஇந்நிலையில், ஊரடங்கை மீறி வெளியே சுற்றினாலும், சமூக இடைவெளி பின்பற்றாவிட்டாலும், கடற்கரை பகுதிக்கு வந்தாலும், வழக்கு பதிவு செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என, சென்னை காவல்துறை எச்சரித்து உள்ளது.



மாநகராட்சி, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் எவ்வளவு முயன்றாலும், பொதுமக்கள், சுயகட்டுப்பாடுடன் நடந்து கொண்டால் மட்டுமே, கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும் என, பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், இரவு நேர ஊரடங்கை மீறுவோரை கண்காணிக்க, 2,000ரத்துக்கும் மேற்பட்ட போலீசார், 200 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், 500 வாகனங்களில், ரோந்து பணியிலும் ஈடுபடுகின்றனர். சில இடங்களில், 'ட்ரோன் கேமரா' வாயிலாகவும் கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம். மக்கள் நலன் கருதியே இதுபோன்ற கடும் கெடுபிடிகள் நடைமுறைபடுத்தப்படுகின்றன. வெளியே சுற்றும் சிலரின் மீது வழக்கு பதிவு செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.உயிர் முக்கியம்தற்போது, ஞாயிற்றுக்கிழமை இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால், பெரும்பாலனோர், சனிக்கிழமை அன்று, இறைச்சி முதல் மளிகை பொருட்களை வாங்க கடைகளில் குவியலாம்.அவ்வாறு, சமூக இடைவெளியின்றி குவியும் பொதுமக்களுக்கு, அபராதத்துடன் வழக்கு பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட கடையை, மாநகராட்சி வாயிலாக மூடி 'சீல்' வைப்பதோடு, அபராதமும் விதிக்கப்படும்.எவ்வித பதற்றமும் இன்றி, உரிய சமூக இடைவெளி கடைபிடித்து, முக கவசம் அணிந்து, கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும். வியாபாரிகளும் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.எல்லாவற்றையும் விட, உயிர் பெரியது.



எனவே, மக்கள் சுயகட்டுப்பாட்டுடன், விதிமுறைகளை பின்பற்றினால், கொரோனாவை வெல்லலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.பிரதான சாலைகளில் தடுப்புசென்னை காவல்துறை கட்டுப்பாட்டில், மெரினா முதல் கானத்துார் வரை வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து, எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை என, பல வழிகளில் கடற்கரைக்கு செல்ல முடியும்.வார விடுமுறையொட்டி, கடற்கரைக்கு படையெடுக்க மக்கள் கூட்டம் வரலாம்.



அவர்களை தடுக்கும் வகையில், பிரதான வழிகளில், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரைக்கு செல்ல பல வழிகள் இருப்பதால், மெரினா முதல் கானத்துார் வரை, சுழற்சி முறையில், போலீசார், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்


--- நமது நிருபர் --

.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஏப்-202107:50:54 IST Report Abuse
ஆப்பு இவிங்களுக்குத்தான் பொழப்பு ஓடுது. மத்தவங்க எல்லாம் வீட்டில் கெடக்க வேண்டியதுதான். இனிமே வீட்டிலேயும் ராத்திரி 10 மணிக்கு மேலே யாராவது முழிச்சுக்கிட்டிருந்தா ரவுண்டு கட்டி அடிப்பாங்க. ஜாக்கிரதை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X