போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
05:25

கஞ்சா விற்ற மூவர் கைதுசோழவரம்: சோழவரம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். விஜயநல்லுார் பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் அங்கு சென்றபோது, கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக கட்டிக் கொண்டிருந்த மூன்று பேர் தப்பி ஓட முயன்றனர். போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர்கள், புழல், காவாங்கரை இளையராஜா, 25, மணிகண்டன், 22, பாடியநல்லுார் விக்னேஷ்வரன், 21, என்பதும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.போலீசார் மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து, ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.வேன் பறிமுதல்ஊத்துக்கோட்டை: வெங்கல் அடுத்த, கீழானுார் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில், திருட்டு மணல் எடுப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. வெங்கல் போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது அவ்வழியே வந்த வேனை சோதனை செய்ததில், அதில், திருட்டு மணல் இருந்தது தெரிந்தது. ஓட்டுனர் தப்பி ஓடினார்.இதுகுறித்து, வழக்குப் பதிந்த போலீசார், வேன் உரிமையாளர், ஓட்டுனரை தேடி வருகின்றனர்.இளம்பெண் மாயம்செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை அடுத்த, வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகள் சந்தியா, 21. இவருக்கும், அரக்கோணத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு, 5 வயதில் மகன், 3 வயதில் மகள் என, இரு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட சந்தியாவை, 10 தினங்களுக்கு முன், அரக்கோணத்திலிருந்து, வீரராகவபுரத்தில் உள்ள தன் வீட்டிற்கு, தாய் சாந்தி அழைத்து வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த 18ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தியா, பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, சாந்தி அளித்த புகாரையடுத்து, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X