கோடை வெயிலில் செல்ல நாய்களை பாதுகாப்பது எப்படி: கால்நடை மருத்துவர் அருண் விளக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
10:52

கோடை கால வெயிலின் தாக்கத்தால் மனிதன் மட்டுமின்றி, வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் உடல் வெப்பம் அதிகரித்து, பல்வேறு நோய்களுக்கு உள்ளாக நேரிடும்.மனிதர்கள் உடல் வெப்பத்தை தவிர்க்க, தங்களை பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி காத்து கொள்வர். அதே போல், வீட்டு செல்லப்பிராணிகளை கோடை வெயிலால் ஏற்படும் வெப்ப நோயில் இருந்து பாதுகாப்பது குறித்து, கால்நடை மருத்துவர் அருண் விவரித்தார்:


கோடை காலம் துவங்கிவிட்டது. குறிப்பாக, மே மாத அக்னிநட்சத்திர காலகட்டத்தில், வெயிலின் அளவு, 100 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக பதிவாகக்கூடும்.அந்த காலகட்டத்தில், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை மிகவும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.



மூன்று கட்டங்கள்




மனிதர்களைப் பொறுத்தவரை, உடல் வெப்பம், உடல் முழுதும் வியர்வை மூலம் வெளியேறுவதால், எளிதில் சமாளிக்க முடியும். விலங்குகளுக்கு, அவற்றின் வாய், நாக்கு, மூக்கின் வழியாக தான் உடல் வெப்பம் வெளியேறும். குறிப்பாக நாய்களை பொறுத்தமட்டில், அதன் உடல் வெப்பத்தை வெளியேற்றுவதை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்.சாதாரணமாக நாயின் நாக்கு தொங்கி, அதன் மூலம் எச்சில் சிறிய அளவில் வெளியேறும். இரண்டாவது கட்டத்ததில், நாக்கு நீளமாக வெளியே வந்து எச்சிலை அதிகப்படியாக வெளியேற்றும். மூன்றாவது கட்டத்தில், நாக்கு பெரிதும் வெளியேறி, கரண்டி போல் வளைந்து, அதிகபடியான எச்சில் வெளியேறுவதுடன் ஒரு வித இரைச்சல், இளைப்புடன் மூச்சு விட கஷ்டப்பட்டு சோர்வாக இருக்கும். இந்த அறிகுறிகள், நாய்களின் உடல் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும். அந்த நேரத்தில், வீட்டிலேயே, அதன் பாதங்களை குளிர்ந்த நீரால் குளிர்ச்சிபடுத்தலாம்.



எக்காரணம் கொண்டும் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டக் கூடாது. ஈரத்துண்டை உடலில் போர்த்தி எடுக்க வேண்டும்.வீட்டில், மின்விசிறி, 'ஏசி' போட்டு, வெயிலின் தாக்கம் இல்லாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அவை அருந்த, குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும்.நாய்கள் படுத்திருக்கும் போது, ஐஸ் துண்டுகளை அவற்றின் வாய், மூக்கின் அருகில் குளிர்ந்த காற்றை சுவாசிப்பது போல் போட்டு வைக்க வேண்டும்.இதற்கு பிறகும், எச்சில் வடிதல் அதிகமாக இருந்தால், அவசியம் மருத்துவரிடம் எடுத்து சென்று ஆலோசனை பெறுவது நல்லது.



மார்ச்,- மே மாதங்கள், 'பாரசைட்' சீசன். உண்ணி போன்ற நோய்களால் நாய்கள் பாதிக்கக்கூடும். அதனால், நாய்களை மருத்துவரிடம் கொண்டு சென்று, ரோமங்களை 'ட்ரிம்' செய்து, அடிக்கடி பிரஷால் சீவி பராமரிக்க வேண்டும். இது, உண்ணிகளிடமிருந்து நாய்களை காப்பாற்றும். அதிக நேரம் வெயிலில் அலைய விடாமல், நிழலான இடங்களில் அல்லது வீட்டிற்குள் கட்டிப்போடுவது நல்லது.



தவறான செயல்


நாய்கள் வசிப்பதற்காக, சிலர் வீடுகளில் கூண்டு வைத்திருப்பர். அந்த கூண்டின் உயரம், 5 -- 6 அடி மட்டுமே இருக்கும். உயரம் குறைவாக இருக்கும் கூண்டுகள், வெப்பத்தை அதிகப்படுத்தும். கோடை காலங்களில், கூண்டில் அடைப்பது மிக தவறான செயல்.அடிக்கடி சுத்தமான நீர் கொடுக்க வேண்டும், நாய்கள் அழுக்கு தண்ணீரை குடிக்க விரும்பாது, குளிர்ந்த நீராக இருந்தால் நல்லது. சில நாய்கள், குழாயில் இருந்து, நேரடியாக தண்ணீர் அருந்த விரும்பும். பொதுவாக, காலை, 10:30 மணிக்கு வெயில் ஆரம்பமாகும். அந்த வெப்பத்தின் தாக்கம், இரவு, 7:00 மணி வரை இருக்கக்கூடும். அந்த நேரங்களில் நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.



நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது, அவற்றின் மூக்கு பகுதி பூமியில் இருந்து மிக குறைவாக, 1 -- 2 அடி மட்டுமே இருப்பதால், பூமியின் வெப்பம் மிக எளிதில் தாக்கக்கூடும்.கோடை காலத்தில் நாய்கள் நன்றாக நாக்கை வெளியே நீட்டி மூச்சு விடும் தன்மை கொண்டவை. எனவே பிளாஸ்டிக், இரும்பு மாஸ்க் போடுவதை தவிர்க்க வேண்டும். வெளியில் சென்று வந்த காரில் வெப்பம் அதிகப்படியாக இருக்கும். அதன் அடியில் படுக்க விடக்கூடாது. அதே போல, குறைவான உயரம் உள்ள பால்கனி, மொட்டை மாடியில் படுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.



தெருநாய்கள், பறவைகளை பொறுத்தமட்டில், தன் உணவை தானே தேடிக் கொள்ளும். ஆனால், கோடை காலத்தில் தண்ணீருக்கு சிரமப்படும். அனைவரும், வீட்டின் முன் சிறிய பாத்திரத்தில் தெருநாய்கள், பறவைகளுக்கு தண்ணீர் வைத்து காப்பாற்ற முன் வர வேண்டும். இவ்வாறு மருத்துவர் அருண் கூறினார்.



என்ன உணவு கொடுக்கலாம்?




உணவை பொறுத்தமட்டில், நாய்களுக்கு, காலை, மாலை மட்டுமே கொடுக்க வேண்டும், மதிய நேரத்தில், வெயிலின் தாக்கத்தால் மிக சோர்வாக இருப்பதால், உணவு சாப்பிட விரும்பாது. ஆகையால், மதியம் உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்குளிர்ந்த உணவு, தண்ணீர் சத்துள்ள உணவுகளாக கொடுக்க வேண்டும். பெரும்பாலானோர், கோடை காலத்தில் நாய்கள், பூனைகளுக்கு தயிர் சாதம் கொடுப்பதாக கூறுவர். தயிர் சாதத்தில் தண்ணீர் சத்து அதிகம் இருப்பதால், செல்லப்பிராணிகள் விரும்பி சாப்பிடும்.ஆனால், அறிவியல் ரீதியாக அவை, குளிர்ச்சியான உணவு என நிரூப்பிக்கப்படவில்லை. விதையில்லாமல் குறைவான அளவு தர்ப்பூசணி மற்றும் பழங்கள் கொடுக்கலாம். கண்டிப்பாக திராட்சை பழம் கொடுக்கக் கூடாது


வெப்ப நோய்கள் பாதிக்கும் நாய் வகைகள்




'பக், பாக்சர், புல்டாக்' போன்ற மூக்கு சிறியதாக இருக்கும் வகை நாய்கள், வெப்ப நோய் பாதிப்புக்கு அதிகளவில் ஆளாகும். 'பொமரேரியன், சவ்சவ், ஜெர்மன் ஷெப்பர்ட்' போன்ற அதிகப்படியான ரோமங்கள் உள்ள நாய் வகைகள், வெயிலின் தாக்குதலுக்கு அதிக பாதிப்புக்கு உள்ளாகும். அந்த வகை நாய்களை மருத்துவரிடம் கொண்டு சென்று, உடல் முழுதும் உள்ள ரோமங்களை ட்ரிம் செய்து கொள்ள வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X