போலீஸ் ஸ்டோரி: விபத்தில் தொழிலாளி பலி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
போலீஸ் ஸ்டோரி: விபத்தில் தொழிலாளி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஏப்
2021
02:39

பீகார் மாநிலம் வைசாலியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் சவுத்ரி, 37. இவர் சூலுார் அடுத்த அரசூரில் தங்கி, பவுண்டரி வேலைக்கு சென்று வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன் நீலம்பூர் அருகே, அவிநாசி ரோட்டை கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்தவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கல் தடுக்கி சிறுமி பலிபீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சத்தியேந்திர சவுத்ரி-, லால் முன்னி தம்பதி. இவர்களுடைய பெண் சாந்திகுமாரி, 14. குடும்பத்துடன் கண்ணம்பாளையத்தில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். கடந்த 24ம்தேதி மாலை, பக்கத்து வீட்டில் சாந்தி குமாரி டி.வி., பார்த்துக்கொண்டிருந்தாள். தாய் அழைப்பதை கேட்டு வேகமாக தனது வீட்டுக்கு ஓடி வந்தாள்.அப்போது, எதிர்பாராத விதமாக கல் தடுக்கி கீழே விழுந்து, பின்னந் தலையில் பலத்த காயமடைந்தாள். அவளை மீட்ட குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சிறுமியை பரிசோதித்த டாக்டர், அவள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினார்.சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.மது விற்றவர்கள் கைதுசூலுார் போலீசார், பெ.நா.பாளையம் மது விலக்கு போலீசார், சூலுார், சுல்தான்பேட்டை, கருமத்தம்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஊரடங்கினால், மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனால், மது பாட்டில்களை பதுக்கி விற்றவர்கள், போலீசாரிடம் பிடிபட்டனர்.சூலுார் அரசு மருத்துவமனை, வடவள்ளி, கரவளி மாதப்பூர் மற்றும் எலச்சிபாளையம் டாஸ்மாக் மதுக்கடை அருகில் மது விற்றவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 78 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மோதல்: இருவர் கைதுவடக்கலுாரைச் சேர்ந்தவர் பிரேமலதா, 31. இவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த, அமராவதி, வீராசாமி, சசிதரன், தவசி ஆகியோர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பிரேமலதா மற்றும் அவரது உறவினர்கள் ஜெகநாதன், நஞ்சம்மாள் ஆகியோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.பிரேமலதா புகாரின்பேரில், வழக்குப் பதிந்த போலீசார், சசிதரனைக் கைது செய்தனர். எதிர்தரப்பான அமராவதி கொடுத்த புகாரில், வழக்குப் பதிவு செய்து, அரிச்சந்திரனைக் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X