அசோகர் ஸ்துாபியை பராமரிக்க கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2021
02:39

மேட்டுப்பாளையம்:அத்திக்கடவு பகுதியில் அமைந்துள்ள, அசோகர் ஸ்துாபியை பராமரிக்க, ஊராட்சி நிர்வாகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என, கெம்மாரம்பாளையம் ஊராட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை நீரை தேக்கி வைத்து, மின் உற்பத்தி செய்ய, முன்னாள் முதல்வர் காமராஜர் குந்தா நீர் மின் திட்டத்தை கொண்டு வந்தார். அப்பர்பவானி அணையில் தேக்கி வைக்கும் தண்ணீரில், அவலாஞ்சியில் மின் உற்பத்தி செய்த பின், அதே தண்ணீரை குழாய் வாயிலாக கொண்டு வந்து, காட்டு குப்பை, குந்தா, மெத்தை, பரளி, பில்லுார் அணை, ஆகிய ஆறு இடங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.குந்தா நீர் மின் திட்டப் பணிகள், 1961ம் ஆண்டு முழுமை அடைந்தவுடன், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் முன்னிலையில், கனடா அமைச்சர் கோடோன் சர்ச்சில் திறந்து வைத்தார். ஓர் அணை தண்ணீரை வைத்து, 6 இடங்களில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை, என்ற பெருமையைப் பறைசாற்றும் வகையில், அத்திக்கடவு பகுதியில் அசோகர் ஸ்துாபி அமைத்து, அதில் திறப்புவிழா கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.அத்திக்கடவு பகுதியில் பணியாளர்கள் குடியிருந்த வரை, ஸ்துாபியை சுற்றியும் வேலி அமைத்து, மின் விளக்கு போட்டு பராமரித்து வந்தனர். தற்போது அங்கு யாரும் குடி இல்லை. இதனால், ஸ்துாபியும் பராமரிப்பின்றி காணப்படுகிறது.கெம்மாரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஸ்துாபி அமைந்துள்ளதால், ஊராட்சித் தலைவர், இதை பராமரிக்க அனுமதி வழங்க வேண்டும் என, மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்திருந்தார்.இதுகுறித்து ஊராட்சித் தலைவர் செல்வி நிர்மலா கூறுகையில்," குந்தா நீர் மின் திட்டம், ஒரே அணை தண்ணீரை வைத்து, ஆறு இடங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு மின் நிலையத்திலும், எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்திட்டம் எவ்வாறு அமைக்கப்பட்டது, என்பது குறித்த விபரம், வருங்கால சமுதாயத்துக்கு அவசியம் தெரிய வேண்டும். எனவே, திட்ட விவரங்களை, கல்வெட்டு அருகே வைத்து, அசோகர் ஸ்துாபியை, ஊராட்சி நிர்வாகமேபராமரிக்க அனுமதிக்கும்படி, மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கோரியுள்ளேன். அனுமதி கிடைத்தவுடன் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X