விளையாட்டுச் செய்திகள்: தென் மாநில ஆணழகன் போட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2021
23:33

கோவை வீரருக்கு இரண்டாமிடம்தென் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில், கோவையை சேர்ந்த ரிச்சர்ட்சன் இரண்டாமிடம் பிடித்து அசத்தினர்.காரைக்கால் ஆட்டோம் பிட்னஸ் மற்றும் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் இணைந்து நடத்தும், தென் மாநில அளவிலான 'பாடிபில்டிங்', பிட்னஸ் சாம்பியன் போட்டி காரைக்கால், தங்கவேல் கலையரங்கில் நடந்தது.வீரர்களுக்கான, 55, 60, 65, 70, 75, 80, 80+ என, பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் கோவையை சேர்ந்த ரிச்சர்ட்சன், பாடிபில்டிங், ஜூனியர் பிரிவில் இரண்டாமிடத்தையும், சீனியர் பிரிவில் மூன்றாமிடத்தையும் தட்டிச்சென்றார். 'ஓவர் ஆல் சாம்பியன் ஷிப்' பட்டத்தை, சென்னையை சேர்ந்த முனிசாமி தட்டி சென்றார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, ரொக்கப்பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.செஸ் பயிற்சி முகாம்மே மாதம் 4ல் துவக்கம்டாக்டர் மகாலிங்கம் செஸ் அகாடமி சார்பில், ஆன்லைன் வாயிலாக செஸ் பயிற்சி முகாம் மே, 4ம் தேதி துவங்கி, 26ல் நிறைவடைகிறது.இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் செஸ் முகாமில்,ஆரம்ப நிலை வீரர்களுக்கு மே 4ம் தேதி துவங்கி 13ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட பயிற்சி முகாம், 17ம் தேதி துவங்கி 26ம் தேதியும் நிறைவடைகிறது.இதில், முதல் பயிற்சி முகாமில் ஆரம்ப நிலை வீரர்களுக்கு விதிமுறை, கட்டங்களின் பெயர் என அனைத்து தகவல்களும் கற்றுத்தரப்படும். இரண்டாம் பயிற்சி முகாமில் விளையாட்டு நுணுக்கம், குறைந்த நிமிடத்தில் வெற்றி பெறும் முறை என, போன்ற தகவல்கள் கற்றுத்தரப்படும்.பயிற்சி முகாமில் பங்கேற்க விருப்பமுடைய நபர், 96004 15608, 80987 27744 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.வாட்ஸ்ஆப்பில் ஒர்க் அவுட் மீண்டும் வீட்டில் பயிற்சிகொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், பயிற்சியாளர்கள் 'வாட்ஸ்ஆப்பில் ஒர்க் அவுட்' அட்டவணை கொடுத்து, வீட்டிலேயே பயிற்சி மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.கொரோனா பரவலை தடுக்க கடந்த 26ம் தேதி முதல், மால், பார்க், தியேட்டர், ஜிம், கோல்ப், டென்னிஸ் கிளப் செயல்பட அனுமதி இல்லைஎன அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,விளையாட்டு வீரர்களின் ஒர்க் அவுட் பிரச்னையை போக்க, கடந்த ஆண்டை போலவேஆன்லைனில் பயிற்சி, வாட்ஸ்ஆப்பில் 'ஒர்க் அவுட்' போன்ற நடைமுறை மீண்டும் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம், அனைத்து வயதினரும் வீட்டிலேயே, 'ஒர்க் அவுட்' செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X