போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2021
05:23

மொபட் மோதி முதியவர் பலிகோவை கணபதிபுதுார் தாரணி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 59. நேற்று முன்தினம் தனது மொபட்டில், காந்திபுரம், 100 அடி ரோடு, ஏழாவது வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த மற்றொரு மொபட், அவர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ராதாகிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கஞ்சா விற்ற நபர் சிறையிலடைப்புகோவை சுங்கம் பை-பாஸ் ரோட்டில், கஞ்சா விற்பனை நடப்பதாக ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது.விசாரணையில் அவர் ராமநாதபுரம், சுங்கம், கருணாநிதி நகரை சேர்ந்த அர்ஷத், 19, எனத் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X