இணக்கம்... இன்சொல்... நற்செயல்! மாவட்ட நன்மையே முக்கியம் ....மறக்காதீங்க எம்.எல்.ஏ.,க்களே
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

05 மே
2021
07:12
பதிவு செய்த நாள்
மே 04,2021 22:24

திருப்பூர் : மாவட்டத்தில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அதிகமாக இருந்தாலும், தொகுதிகளுக்கு தேவையான பணிகளையும், திட்டங்களையும் கேட்டுப்பெறுவதில் சுணக்கம் இருக்கக்கூடாது; தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிக்கு என்று மட்டும் அல்லாது, மாவட்டத்தின் ஒட்டுமொத்த நன்மையை கருத்தில் கொண்டு திட்டங்களை நிறைவேற்ற முனைப்பு காட்ட வேண்டும்.மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, காங்கயம், தாராபுரத்தில் தி.மு.க., வேட்பாளர்களும், இதர ஐந்து தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.அரசுடன் இணக்கம் இந்த முறை, கடந்த முறை போன்றே, அ.தி.மு.க., வேட்பாளர்கள் அதிகளவில் வென்றாலும், தி.மு.க., ஆட்சியைப் பிடித்ததால், இவர்கள் இந்த முறை எதிர்க்கட்சி வேட்பாளர் களாக இருப்பர்.கடந்த முறை போன்றே, இந்த முறையும், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களால், தொகுதிக்கு தேவையான செயல்களை மேற்கொள்வது எளிதாக இருக்க வேண்டும் என்றால், ஆளும், தி.மு.க., அரசின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவையானதாக இருக்கும்.அதேசமயம், தற்போது, தேர்வான மூன்று தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களால், தொகுதிக்கு தேவையானவற்றை செய்வது எளிதாக இருக்கும்.அனுபவமே ஆற்றல் : திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.,வாக தேர்வாகியுள்ள செல்வராஜ், மேயராக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். காங்கயம் எம்.எல்.ஏ.,வாக வென்றுள்ள சாமிநாதன், அமைச்சர் பொறுப்பை வகித்தவர். தாராபுரத்தில் வெற்றி பெற்றுள்ள கயல்விழி, புதியவர் என்பதால், அவரும் உற்சாகத்துடன் தொகுதிக்குப் பணிகளை மேற்கொள்ள முடியும். செல்வராஜூம், சாமிநாதனும், கட்சியில் சீனியர்கள் என்ற வகையில், அவர்களது அனுபவம், மாவட்டத்தில் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில், கைகொடுக்க வேண்டும்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதி என்று கருதாமல், மாவட்டத்தின் ஒட்டுமொத்த நன்மை கருதி, புதிய பணிகளையும், தேவையானவற்றையும் நிறைவேற்ற உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். மாவட்டம், பிரச்னைகளை எதிர்கொள்ளும்போதோ, நிதி ஒதுக்கீடு அவசியமாக அமையும்போதோ தி.மு.க., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒன்றுபட்டு களத்தில் இருக்க வேண்டும்.அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 'எதிர்க்கட்சியினர் தானே நாம்' என்ற எண்ணத்தில், தொகுதிக்கான கோரிக்கைகளை கேட்டுப்பெறுவதிலோ, புதிய பணிகளை மேற்கொள்வதில் உறுதியாக இருப்பதிலோ, பின்வாங்கிவிட கூடாது; அதேசமயம், அரசுடன் இணக்கமாக இருந்து கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.திருப்பூரில் 'ஸ்மார்ட் சிட்டி' உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அவற்றை முறைப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வேறு வேறாக இருந்தாலும், ஏற்றுமதி நகரம் என்ற வகையில், மத்திய அரசின் மூலம் திருப்பூருக்கான வளர்ச்சித்திட்டங்களை பெறுவதிலோ, தொழிலுக்கு நெருக்கடிகள் நேரும்போது அவற்றை களைவதிலோ எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி., ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டியதும் கட்டாயம்.இருதரப்பு எம்.எல்.ஏ.,க்களுமே பிரச்னைகள் வரும் போது, அதில், 'அரசியல்' செய்யாமல், ஆக்கப்பூர்வமாக செயலாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-மே-202108:17:56 IST Report Abuse
ravi chandran யாரையா அது விவரம் தெரியாம நடப்பது எந்த ஆட்சின்னு தெரியாம பீ கேர் புல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X