முகக்கவசமும் கையுறையும் இல்லை கொரோனா அச்சத்தில் அரசு பஸ் கண்டக்டர்கள் | மதுரை செய்திகள் | Dinamalar
முகக்கவசமும் கையுறையும் இல்லை கொரோனா அச்சத்தில் அரசு பஸ் கண்டக்டர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 மே
2021
01:27

மதுரை, மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை இன்றி பணிபுரிய வேண்டியுள்ளதாக அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா முதல் அலை துவக்கத்தில் முககவசம், கையுறை, சானிடைசர்ஸ் உள்ளிட்ட தொற்று தடுப்பு பொருட்கள் கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு வழங்கப்பட்டன.
தற்போது 2வது அலையில் அதிக உயிர்பலிகள் ஏற்படும் நிலையில் அதுபோன்ற தற்காப்பு
நடவடிக்கையில் நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
நகரில் இயங்கும் அரசு டவுன் பஸ்களில் படிக்கட்டு அருகில் பயணிகள் கை நீட்டினால் 'சானிடைசர்ஸ்' கிடைக்கும்
வகையில் பேட்டரி தானியங்கி கருவிகள்
பொருத்தப்பட்டிருந்தன. அவை பெரும்பாலான பஸ்களில் தற்போது இயங்கவில்லை.
இதனால் தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் கண்டக்டர்களுக்கும், பயணிகளுக்கும் நோய்த் தொற்றும் அபாயம் அதிகரித்துள்ளது.
கண்டக்டர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு கிளையிலும் 20க்கும் மேற்பட்ட கண்டக்டர்கள், டிரைவர்கள், டெக்னீசியன்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். கிளை மேலாளர் ஒருவரே தொற்றுக்கு பலியான பின்னரும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை, என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X