'ரெம்டெசிவிர்' திருடர்கள் ஜாக்கிரதை! | திருப்பூர் செய்திகள் | Dinamalar
'ரெம்டெசிவிர்' திருடர்கள் ஜாக்கிரதை!
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மே
2021
01:14

திருப்பூர் : 'இருப்பில் உள்ள ரெம்டெசிவிர் மருந்தை மாயமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று, அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கொரோனா சிகிச்சையில், 'ரெம்டெசிவிர்' மருந்து முக்கிய இடம் வகிக்கிறது; இதற்கு தட்டுப்பாடு நிலவுவதால், மருந்து தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில், சமீபத்தில், எட்டு பெட்டிகள், 'ரெம்டெசிவிர்' மருந்து திருடப்பட்டது கண்டறியப்பட்டது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:மருத்துவர் பரிந்துரை, நோயாளிகளின் உடல்நிலை அறிக்கை, ஆதார் கார்டு கொண்டுவந்தால், 'ரெம்டெசிவிர்' மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்து, கள்ளச்சந்தையில் விற்பனையாவதை தடுக்க, மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன; வருவாய் மற்றும் போலீஸ் துறையினர், இதில், சுகாதாரத்துறையினருடன் இணைந்து செயல்படுகின்றனர்.


இதை தொடர்ந்து 'ரெம்டெசிவிர்' மருந்தைப் பாதுகாப்பதில், கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'ரெம்டெசிவிர்' மருந்து மாயமாகாமல், உரிய நோயாளிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட அதிகாரிகளுக்கும், இதுதொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X