ஊழியர்கள் மூவருக்கு தொற்று நகராட்சி அலுவலகம் மூடல் | கடலூர் செய்திகள் | Dinamalar
ஊழியர்கள் மூவருக்கு தொற்று நகராட்சி அலுவலகம் மூடல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மே
2021
04:48

கடலுார்-கடலுார் நகராட்சி அலுவலக ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அலுவலகம் மூடப்பட்டு அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.கடலுார் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 3 நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது. தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், கடலுார் நகராட்சி அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மூவருக்கு தொற்று உறுதியாகியது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.அதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நகராட்சி அலுவலக பிரதான வாயில் மூடப்பட்டு பொதுமக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அத்தியாவசிய பணிகளுக்கு வருவோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். குறைந்த அளவிலான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அலுவலகம் முழுதும் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X