திரிணாமுல் காங்.,கை கண்டித்து மாவட்டத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2021
04:50

கடலுார்; மேற்கு வங்கத்தில்பா.ஜ.,வினர் மீதுதாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்.,கை கண்டித்துகடலுார் மாவட்டத்தில்பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுாரில், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஓ.பி.சி., அணியின் மாநில செயலாளர் சாய்சுரேஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வேலு வெங்கடேசன் வரவேற்றார்.கடலுார் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொதுச்செயலாளர் விஜயரங்கன், பிரசார பிரிவு மாவட்ட தலைவர் சீனுவாசன் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.விருத்தாசலம்விருத்தாசலம் பாலக்கரையில் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செந்தில்குமார், விவசாய அணித் தலைவர் செந்தில், மாநில அறிவுசார் பிரிவின் மாநில செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர்.அமைப்பு சாரா பிரிவு மாநில செயலாளர் பாபு, மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜெயராமன், துணைத் தலைவர்கல்கிராஜ், செயலாளர் கவுதமன் உட்பட பலர்பங்கேற்றனர்.சேத்தியாத்தோப்புராஜிவ் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கீரப்பாளையம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.மாவட்ட மகளிரணி பழனியம்மாள், செயலாளர் ராம்பிரபு, பிரசார பிரிவு துணைத் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ராஜேஷ் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வினர் மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்.,கை கண்டித்து பேசினர்.புவனகிரிபுவனகிரி பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜானகி சுகுமாரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X