கொரோனாவுக்கு 4 பேர் பலி | கடலூர் செய்திகள் | Dinamalar
கொரோனாவுக்கு 4 பேர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மே
2021
04:52

கடலுார்-கடலுார் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதித்த 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 31,535 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.நேற்று 296 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 31,831 ஆக உயர்ந்துள்ளது. 269 பேர் குணமடைந்ததால், இதுவரை 29,188 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.தொற்று பாதித்த 1,501 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். வெளி மாவட்டங்களில் 533 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 323 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.மாவட்டத்தில் தொற்று பாதித்து நேற்று முன்தினம் வரை 336 பேர் இறந்த நிலையில், நேற்று, சிதம்பரத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர், புவனகிரியைச் சேர்ந்த 45 வயது பெண், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த 48 வயது நபர், நெய்வேலியைச் சேர்ந்த 35 நபர் என 4 பேர் இறந்ததையடுத்து இறப்பு எண்ணிக்கை 340 ஆக அதிகரித்துள்ளது. 87 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X