மயான பூமியில் வசூல் வேட்டை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2021
05:08

சென்னை-கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய, ஊழியர்கள், 5,௦௦௦ முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.சென்னையில், கொரோனா, 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமாகியும், போதுமான மருத்துவ வசதி, ஆக்சிஜன் குறைபாடு காரணமாகவும், உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இறந்தவர்களை அடக்கம் செய்யவும், எரிக்கவும் மாநகராட்சி சார்பில், சென்னையில், 240 மயான பூமிகள் உள்ளன.ஆனால், இங்கு அடக்கம் செய்யவோ, எரிக்கவோ ஊழியர்கள், 5,௦௦௦ முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.சில தினங்களுக்கு முன் கொரோனாவால் இறந்தோர் உடல்களை அடக்கம் செய்ய, நுங்கம்பாக்கம் மயான பூமியில், மறுப்பு தெரிவித்துள்ளனர். பின், இறந்தவர்களின் உறவினர்களிடம், 2,000 ரூபாய் லஞ்சம் பெற்ற பின், அடக்கம் செய்ய அனுமதித்ததாக பாதிக்கப்பட்டோரில் சிலர், அதிருப்தி தெரிவித்துஉள்ளனர். கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட உறவினர்களை இழந்து தவிக்கும் அவர்களின் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டு, அவர்களின் மனவேதனையை மேலும் அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்வோர் மீது, அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
06-மே-202118:27:44 IST Report Abuse
RajanRajan நோட் திஸ் பாயின்ட்...
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
06-மே-202107:22:10 IST Report Abuse
chennai sivakumar வசூல் நல்லாவே நடக்குது. நானே அனுபவ பட்டேன். ஹி ஹி ஹி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X