டவுன் பஸ்களில் அதிகளவு பயணிகள் செல்வதால்... அச்சம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2021
00:23

கள்ளக்குறிச்சி : கொரோனா தடுப்பு நடைமுறையில் புதிய கட்டுப்பாட்டுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இருந்தும் கள்ளக்குறிச்சி பகுதி டவுன் பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிகளவு பயணிகள் பயணிப்பதால் கொரோனா வேகமாக பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.



தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.இருந்து கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்குவந்துள்ளது. நேற்று முதல் பகல் 12 மணி வரை மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு லாக் டவுன் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன



அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். மளிகை கடைகள், காய்கறி கடைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 12 மணிவரை மட்டும் இயங்கும். உணவகங்கள், பேக்கரிகள் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி மதல் மாலை 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இயங்கலாம். இவற்றில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



டீக்கடைகள் , மீன், இறைச்சிக் கடைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். டீக்கடைகளில் பார்சல் மட்டும் அனுமதி.பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் மற்றும் அரசு பஸ்கள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.



மருந்து கடைகள் , பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், தவிர்க்க முடியாத தேவைகள் என குறிப்பிட்ட தளர்வு நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.இதனால் காலை வேளைகளில் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமானவர்கள் டவுன் பஸ்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.



பகல் 12 மணிக்குள் பணிகளை முடித்து வீடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், கள்ளக்குறிச்சியிலிருந்து குறைந்தளவில் இயக்கப்படும் டவுன் பஸ்களில் பயணிகள் முண்டியடித்து ஏறிச் செல்லும் நிலை இருந்து வருகிறது நேரக்குறைப்பு காரணமாக இந்த கூட்டத்தை தவிர்க்க முடியாமல் போகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகள் எந்த வகையிலும் கடைபிடிக்க முடியாத சூழலுக்கு கிராமப்பகுதி பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.



எனவே தளர்வுகள் உள்ள கால கட்டத்தில் அதிக பஸ்களை இயக்கி, சமூக இடைவெளியுடன் பாதுகாப்பான பஸ் பயணத்தை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருதுகினறனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X