கொரோனா தடுப்பு புதிய நடைமுறை அமல்; கடலூர் மாவட்டத்தில் சாலைகள் 'வெறிச்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2021
00:54

கடலுார் : கொரோனா தடுப்பு புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து, கடைகள் அடைக்கப்பட்டதுடன் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது.



கொரோனா இரண்டாவது பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகங்கள் மூடப்பட்டன.மேலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும். உணவகங்களில் பார்சல் சேவை, மளிகை, காய்கறி, டீ கடைகள் உள்ளிட்ட அனைத்தும் பகல் 12:00 மணிக்குள் மூட வேண்டும் உள்ளிட்ட புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.



இதனால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால், மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.மாவட்டம் முழுதும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சிதம்பரம்சிதம்பரம் பகுதிகளில் நேற்று காலை 10:00 மணி வரை மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் நகர பகுதி மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்டது.



தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் 12:00 மணி முதல் கடைகளை மூடும்படி அறிவுறுத்தினர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டு 12:00 மணிக்கு மேல் நகரம் வெறிச்சோடியது.அரசு உத்தரவை மதிக்காமல் கடைகளை திறந்து வியாபாரம் செய்த 10க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் தலா 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.விருத்தாசலம்விருத்தாசலத்தில் 12:00 மணிக்கு மேலும் திறந்திருந்த கடைகள் போலீசார் எச்சரித்ததும் மூடப்பட்டன.டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X