மதுரையில் ஆக்சிஜன் நுகர்வு 300 சதவீதம் அதிகரிப்புஆய்வுக்கு பின் கலெக்டர் அன்பழகன் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2021
01:10



மதுரை :''மதுரையில் ஆக்சிஜன் நுகர்வு 300 சதவீதம் அதிகரித்துள்ளது. தேவையை கருத்திற் கொண்டு திரவ நிலை ஆக்சிஜன் பெற்று சிலிண்டர்களில் நிரப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் படுக்கைகள், தேவையான ஆக்சிஜனை பெறுவது குறித்து ஆய்வு செய்த கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
டீன் சங்குமணி உள்ளிட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். 26 கிலோ லிட்டர் ஆக்சிஜன் கொள்கலனை கலெக்டர் பார்வையிட்டார். பின் அவர் கூறியதாவது: இம்மருத்துவமனையில் ஆக்சிஜன் செலவை எந்தெந்த வகையில் குறைத்து முறையாக பயன்படுத்தலாம் என ஆய்வு செய்யப்பட்டது.
அரசும் ஆக்சிஜனை சப்ளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பும் சூழல் உள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதலாக ஆக்சிஜனை பெற விவாதிக்கப்பட்டது. வீணாக்காமல் ஆக்சிஜனை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அரசு மருத்துவமனையில் 26 கிலோ லிட்டர் கொள்கலன் நிறுவப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 கிலோ லிட்டர் பயன்
படுத்தப்படுகிறது.
பாலக்காடு ஐநாக்ஸ் நிறுவனத்திடமிருந்து தொடர்ந்து ஆக்சிஜன் பெறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கிறது. ஆக்சிஜன் நுகர்வு 300 சதவீதம் அதிகரித்துள்ளது. நுாறு கிலோ லிட்டர் தேவைப்பட்ட இடத்தில் தற்போது 300 கிலோ லிட்டர் தேவைப்படுவதாக 2வது அலை தாக்கம்
உள்ளது.
முதல் அலையில் இதுபோன்ற சூழல் இல்லை. 2வது அலையில் நோயாளிகள் மூச்சுதிணறலுக்குள்ளாகும் நிலையுள்ளது. அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டியுள்ளது. தேவை அதிகரிக்கிறது.
மதுரையில் இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அவை 24 மணி நேரமும் செயல்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்கின்றன. ஏற்கனவே செய்த ஒப்பந்த அடிப்படையில் அனைத்து மருத்துவமனைகளுக்கு பகிர்ந்து அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் 1200 படுக்கைகளில் 400 ல் பிற மாவட்டத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்ட நோயாளிகள் என்றாலும் உயிர் முக்கியம். தென்மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் அனுமதியாகின்றனர்.
குறைந்த பாதிப்புள்ளவர்களுக்கு கோவிட் கேர் சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 3 ஆயிரம் படுக்கைகளில் 30 சதவீதம் நிரம்பியுள்ளது. 2வது நிலையில் பாதிப்புள்ளானவர்களுக்கு கொரோனா ெஹல்த் சென்டர் உசிலம்பட்டி, திருமங்கலம், மேலுார் அரசு பொது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவனையில் 1300, தோப்பூரில் 250 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது 1100 படுக்கைகள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு நாளும் அனுமதி, டிஜ்சார்ஜ் பொறுத்து படுக்கைகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன, என்றார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
07-மே-202110:26:55 IST Report Abuse
Manian கோராநா எங்களையே ஒன்னும் செய்ய முடியாதுன்னு நினைச்சோம் . முன்னாடியே தெறிஞ்சிருந்த ஆககிசனையுமே பதுக்கி காசு பாத்து இருப்போம் திருடர்கள் கழக தொண்டர்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X