புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

08 மே
2021
00:11
பதிவு செய்த நாள்
மே 08,2021 00:01

புதுச்சேரி:புதுச்சேரி முதல்வராக, ரங்கசாமி நேற்று பதவியேற்றார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



புதுச்சேரியில் நடந்து முடிந்த, 30 தொகுதிக்கான சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., 10 இடங்கள், பா.ஜ., ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரான என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.இதையடுத்து, 15வது சட்டசபையின் முதல்வராக, ரங்கசாமி பதவியேற்பு விழா, கவர்னர் மாளிகையில் நடந்தது.



எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள், கொரோனா தொற்று பரிசோதனை செய்து அனுமதிக்கப் பட்டனர்.ரங்கசாமி, நேற்று காலை கதிர்காமம் கந்தசாமி கோவிலில் தரிசனம் செய்தார். மதியம் 1:00 மணிக்கு, ஆன்மீக குருவான, அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் பூஜை செய்து, அங்கிருந்து புறப்பட்டு மதியம், 1:10 மணிக்கு, கவர்னர் மாளிகை வந்தடைந்தார்.மதியம், 1:16 மணிக்கு, புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.



பதவியேற்பு





உறுதிமொழியின் முதல் வரியைமட்டும், கவர்னர் ஆங்கிலத்தில் படிக்க, பதவியேற்கும் முதல்வர், முழுதுமாக தமிழில் படித்து பதவி பிரமாணம் ஏற்பர்.ஆனால், நேற்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணத்தின் முழு வரிகளையும் தமிழில் படிக்க, ரங்கசாமியும் கூடவே படித்து பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.


'விழாவிற்கு பின், வழக்கமான கவர்னரின் தேனீர் விருந்து நடக்கவில்லை. 15 நிமிடங்களில் பதவியேற்பு முடிந்து, 1:25 மணிக்கு ரங்கசாமி புறப்பட்டு சென்றார்.தன் காரிலும் யாரையும் ஏற்றாமல், டிரைவருடன்தனியாக புறப்பட்டு சென்றார். முதல்வரின்பாதுகாப்பு அதிகாரியை கூட காரில் ஏற்றவில்லை.



விழாவில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி, பா.ஜ., - காங்., - தி.மு.க., ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., தேசிய செயலர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.




4வது முறையாக முதல்வர்





புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மிகவும் எளிமையானவர். அவரை, முதல்வர் அலுவலகம் அல்லது வீட்டில் சாதாரண மக்கள் சந்தித்து, கோரிக்கைகளை தெரிவித்து, தீர்வு காண முடியும்.காங்கிரசில் இருந்த ரங்கசாமி, 1991 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். 2001ம் ஆண்டு தேர்தலில், வெற்றி பெற்று, முதல்வரானார். அடுத்து, 2006ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வரானார்.



அமைச்சர்களுடன் கருத்து வேறுபாடு காரணமாக, 2008ல், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 2011ம் ஆண்டு பிப்., 7ம் தேதி என்.ஆர்.காங்., கட்சியை ஆரம்பித்து, அப்போது நடந்த தேர்தலில் வென்று, மூன்றாவது முறையாக முதல்வரானார்.கடந்த, 2016ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து, எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். தற்போது, பா.ஜ., கூட்டணியில் தேர்தலை சந்தித்து, நான்காவது முறையாக முதல்வராகி உள்ளார்.



புதுச்சேரியில், 1963ம் ஆண்டு முதல் 2021 வரை, 19 பேர் முதல்வராக இருந்துள்ளனர். இதில், அதிகபட்சம், பரூக் மரைக்காயர் மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார். அவரது சாதனையை, தற்போது, ரங்கசாமி முறியடித்துள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X