பாம்பன் ரயில் பாலம் பணிகள் சுறுசுறுப்பு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பாம்பன் ரயில் பாலம் பணிகள் சுறுசுறுப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 மே
2021
00:29

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம், பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி, முழு வீச்சில் நடக்கிறது.



ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம், நுாற்றாண்டுகளை கடந்தது. இதன் நடுவில் உள்ள துாக்கு பாலம், 2018ல் பலவீனமானது. புதிய ரயில் பாலம் அமைக்க, மத்திய அரசு, 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.கடந்த, 2019ல் கட்டுமான பணி துவங்கியது. தற்போது, புதிய பாலத்திற்கு, 99 துாண்களும், நடுவில், 200 அடி நீளத்தில் அமையவுள்ள துாக்கு பாலத்திற்கு துாண்கள் அமைக்கும் பணியும், முழு வீச்சில் நடக்கிறது.



அக்டோபரில் துவங்கும் பருவ மழையால், பால பணி பாதிக்காமல் இருக்க, அதற்கு முன்பே துாண்கள், 'கர்டர்கள்' பொருத்தும் பணியை முடிக்க, ரயில்வே நிர்வாகம் வேகம் காட்டி வருகிறது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X