பறிபோகுது! கோடை ஆடை உற்பத்தி ..... உறு்பத்தியாளர்கள் கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

08 மே
2021
07:11
பதிவு செய்த நாள்
மே 08,2021 02:29

திருப்பூர் : கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், கடந்த ஆண்டு கோடை கால ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை இழந்தன.



கடந்த ஆண்டு இழந்த வர்த்தகத்தை, இந்த ஆண்டு மீட்டுவிடலாம் என்கிற நம்பிக்கையுடன், கோடைக்கு உகந்த 'பைன்' ரக ஆடை தயாரிப்பில் திருப்பூர் நிறுவனங்கள் வேகம்காட்டி வந்தன.நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வீசிவருகிறது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக, வெளிமாநில அரசுகள், பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. இதனால், நாடுமுழுவதும் ஆடை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூரிலிருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்கு வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளது. இதனால், உற்பத்தி செய்த ஆடைகள், சரக்கு புக்கிங் அலுவலக குடோன்களிலும், நிறுவனங்களிலும் நீண்டநாட்களுக்கு தேங்குகின்றன.



புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், 6ம் தேதி முதல், தமிழகத்திலும், ஜவுளி வர்த்தகம் முடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, திருப்பூரில், உள்நாட்டு சந்தைக்கான ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:தொற்று தடுப்பு நடவடிக்கைகளால், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில், ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.புதிய கட்டுப்பாடுகளால், தமிழகத்திலும், ஆடை வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வர்த்தகம் நடைபெறாததால், வெளிமாநிலம், வெளிமாவட்ட வர்த்தகரிடமிருந்து ஆர்டர் வருகை ரத்தாகியுள்ளது.



இதனால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும், கோடை கால ஆடை வர்த்தகம் முடங்குவது கவலை அளிக்கிறது.பெரும்பாலான நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு வேலை அளிப்பதற்காக, கையிருப்பு துணியை கொண்டு, ஆடை தயாரித்து இருப்பு வைத்துவருகின்றன. இதே நிலை நீடித்தால், உற்பத்தியை முழுமையாக நிறுத்தவேண்டிய நிலைக்கு பின்னலாடை நிறுவனங்கள் தள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X