ஒரு காபி தயாரிக்க 140 லிட்டர் தண்ணீர் வேண்டும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
02:30

நீர் மேலாண்மை குறித்து, 'மறைநீர்' (virtual water) என்ற தலைப்பில் ஒரு நல்ல நுாலை எழுதி இருக்கிறார், பொதுப்பணித்துறை ஆழியாறு அணை நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளர் லீலா.நீர் பயன்பாடு குறித்து, அவர் தரும் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன. ஒரு கப் காபி தயாரிக்க, 140 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்கிறார்.



எப்படி என்றால், காப்பி பயிர் விளைய தேவையான தண்ணீர் முதல், காபி குடித்த பின் கப்பை கழுவி வைக்கும் தண்ணீர் வரைக்கும், 140 லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்கிறார். மழை நீர் தெரியும்... அது என்ன மறைநீர்? நீரின் தேவை பற்றி நமக்கு தெரியும். அதன் முழுமையான பயன்பாடு தெரியாது. பயன்படுத்திய பிறகு நீர் என்ன ஆகிறது என்பது தெரியாது. ஒரு கார் தயாரிக்க, நான்கு லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை, ஒரு ஜீன்ஸ் பேன்ட்ஸ் தயாரிக்க, 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை, ஒரு கிலோ பிராய்லர் கோழி கறி உற்பத்தி செய்ய, 4300 லிட்டர் நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டைக்கு, 196 லிட்டர் தேவை.


இப்படி ஒவ்வொரு பொருளின் உற்பத்திக்கு பின்னாலும், இவ்வளவு தண்ணீர் மறைந்து இருக்கிறது. இதைதான் மறை நீர் (virtual water) என்கிறோம். இது பற்றி தெரியாதால்தான் தண்ணீரை வீணாக்குகிறோம்.தண்ணீரை சேமிக்க என்ன செய்யலாம்? தண்ணீர் தானே என்ற அலட்சிய போக்கு, எல்லோரிடமும் இருக்கிறது. பணம் கொடுத்து வாங்கிய மினரல் வாட்டரையே, வீணாக்கும் போக்கு உள்ளது. உணவுக்கும், உணவு உற்பத்திக்கும் பயன்படும் நீர் மட்டும் நமக்கு தெரிகிறது. இவை இரண்டுக்கும் தேவைப்படும் தண்ணீர் அளவு குறைவு.அதன் பிறகு ஆகும் நீரின் அளவுதான் அதிகம். உதாரணமாக, சாப்பிட்ட பிறகு தட்டு, பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தும் தண்ணீரின் அளவு மிக அதிகம். கழிவுநீர் ஆனப்பிறகு, நீர் எதற்கும் பயன்படுவதில்லை.



இதை எல்லாம் யாரும் கவனிப்பதில்லை.பயன்படுத்திய நீரை மீண்டும், பயன்பாட்டுக்கு கொண்டு வர என்ன செய்யலாம்?பயன்படுத்திய நீரை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர, மரங்களால் மட்டும் தான் முடியும். நகரங்களில் மரம் நடுவதால் மழை வராது. ஆனால் பசுமை பரப்பு அதிகரிக்கலாம். அதனால் பூமி வெப்பம் அடைவது குறையும்.மழையை கொண்டு வரும் தன்மை, மழைக்காடுகளுக்கு மட்டும்தான் உண்டு. அந்த காட்டை மனிதர்களால் உருவாக்க முடியாது. அழிக்கத்தான் முடியும். மழைக்காடுகள் மழை நீரை உறிஞ்சி வைத்து கொள்ளும். அதன் கசிவு நீர்தான் அருவியாக, ஓடையாக நம் பயன்பாடுக்கு வருகிறது.சமவெளியில் உள்ள மரங்களால், மழைக்கு வாய்ப்பு இல்லையா?இயற்கை, இயற்கையாக இருந்தவரை மழைக்கு பஞ்சம் இல்லை.



மழைக்காடுகள் அழிக்கப்பட்டதால் தான், மழையளவு குறைந்தது. மலைகளில் உயர்ந்த மரங்கள் இருந்தால் மழை வரும். வால்பாறைக்கு மேல் உள்ள சின்னக்கல்லாறு பகுதியில் மழை பெய்து கொண்டே இருக்கும். சிரபுஞ்சி காடுகளில் மழை பெய்யும். காரணம் அவை மழைக்காடுகள். உயரமான மலைகளில் மேகங்கள் மோதும் போது மழையாகிறது.இங்கு மழைகாடுகளின் பரப்பளவை அதிகரிக்க முடியாதா?பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இயற்கையாக உருவாகி இருந்த மழைக்காடுகளையும், சோலைக்காடுகளையும் அழித்து, டீ மற்றும் காபி தோட்டங்களையும் உருவாக்கி இருக்கிறோம். இதை மீண்டும் மழைக் காடுகளாக மாற்ற நம்மால் முடியாது. அங்கே ஆரஞ்சு, ஆப்பிள் மரங்களை நட்டால் மழை வருமா என்றால் வராது.



ஹைக்கூ பெண்களுக்கானது அல்ல!


''கவிதை படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. ஹைக்கூ மேல் தனி பிரியம் இருந்ததால் அதிகம் வாசித்தேன். பொதுவாக தமிழில் இன்றைக்கு எழுதப்படும் கவிதைகள், பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி எழுதப்படுகிறது. ஹைக்கூவின் தன்மை அப்படி இல்லை. அது, ஜென் தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. அதன் காட்சிகள் அபூர்வமாக இருக்கும். அதன் உன்னதம் தனித்துவமானது. விரைவில் என் ஹைக்கூ கலெக் ஷன் வெளிவர உள்ளது,'' என்கிறார் லீலா.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X