புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
04:35

புதுச்சேரி-புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார். கவர்னர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற விழாவில், அவருக்கு, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



புதுச்சேரி சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்., 10, இடங்களிலும், பா.ஜ., 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரான ரங்கசாமி, இரு கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தை, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக, 15வது சட்டசபையின் முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு விழா, கவர்னர் மாளிகையில் நேற்று எளிமையாக நடந்தது.சாமி தரிசனம்என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, நேற்று காலை கதிர்காமம் கந்தசாமி கோவிலில் தரிசனம் செய்தார். மதியம் 1:00 மணிக்கு, ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் பூஜை செய்து, மதியம் 1:10 மணிக்கு, கவர்னர் மாளிகை வந்தடைந்தார்.தமிழில் பதவியேற்புரங்கசாமியை, தலைமைச்செயலர் அஸ்வனிகுமார், எம்.எல்.ஏ.,க்கள் வரவேற்றனர். மதியம் 1:16 மணிக்கு, முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.



பதவியேற்பு உறுதிமொழியை, முதல் வரியை மட்டும் ஆங்கிலத்தில் கவர்னர் படிக்க, பதவியேற்கும் முதல்வர் முழுவதுமாக தமிழில் படித்து பதவிப்பிரமாணம் ஏற்பார்.நேற்று, கவர்னர் தமிழிசை பதவிப் பிரமாணத்தின் முழு வரிகளையும் தமிழில் படிக்க, ரங்கசாமியும் கூடவே படித்து பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஏற்றுக் கொண்டார்.தேனீர் விருந்து தவிர்ப்புரங்கசாமிக்கு, கவர்னர் தமிழிசை சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். முதல்வர் ரங்கசாமி, கவர்னருக்கு சால்வை அணிவித்து, ஆசி வழங்கி நன்றி கூறினார்.பதவியேற்பு விழாவிற்கு பிறகு, வழக்கமான கவர்னரின் தேனீர் விருந்து நடக்கவில்லை. பதவியேற்பு முடிந்து, பகல் 1:25 மணிக்கு ரங்கசாமி உடனடியாக புறப்பட்டு சென்றார்.விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், கொரோனா தொற்று பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.15 நிமிடத்தில் முடிந்த விழாமுதல்வர் பதவியேற்பு விழா, மதியம் 1:10 மணிக்கு துவங்கி 1:25க்கு, 15 நிமிடத்தில் முடிந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஜி.பி., ரன்வீர்சிங் கிருஷ்ணியா, ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர்.தனியாக சென்ற ரங்கசாமிபதவியேற்பு விழா முடிந்து, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சால்வை அணிவிப்பதை ரங்கசாமி தவிர்த்து, கையில் வாங்கிக்கொண்டு ஆசி வழங்கினார்.தனது காரிலும் யாரையும் ஏற்றாமல், டிரைவருடன் தனியாக வந்து, விழா முடிந்து தனியாக புறப்பட்டு சென்றார்.



முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியைகூட காரில் ஏற்றவில்லை.வாழ்த்துவிழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி, கோகுலகிருஷ்ணன் எம்.பி., ராஜிவ்சந்திரசேகர் எம்.பி., புதுச்சேரி பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் நமச்சிவாயம், ஜான்குமார், செல்வம், ரிச்சர்ட், சாய் சரவணக்குமார், கல்யாணசுந்தரம், என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.க்கள் ராஜவேலு, தேனீ ஜெயக்குமார், லட்சுமிநாராயணன், கே.எஸ்.பி. ரமேஷ், ஆறுமுகம், பாஸ்கர், சந்திரபிரியங்கா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, செந்தில்குமரன், அனிபால் கென்னடி, சம்பத், காங்., எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார், சிவசங்கரன் கலந்து கொண்டனர்.



பா.ஜ., தேசிய செயலாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் சுரானா, மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன் உட்பட பலர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X