மரத்திலேயே வெடித்து வீணாகும் பலாப்பழங்கள்: வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
05:00

கடலுார்- கொரோனா பரவல் காரணமாக வெளியூர் வியாபாரிகள் வராததால், கடலுார் மாவட்டத்தில் அறுவடை செய்ய முடியாமல் மரத்திலேயே பலாப்பழங்கள் வெடித்து வீணாகின்றன.பண்ருட்டி என்றாலே பலாப்பழம் ஞாபகத்திற்கு வரும். பண்ருட்டி பலாவுக்கு உள்ள தனிச்சுவையால் மார்க்கெட்டில் தனி இடம் உண்டு. செம்மண் பூமியான பண்ருட்டி, காடாம்புலியூர், நடுவீரப்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, வாண்டராசன்குப்பம், குமளங்குளம், விலங்கல்பட்டு, மூலக்குப்பம், பெத்தாங்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பில் பலா பயிரிடப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் துவங்கி, மே மாதம் வரை பலாப்பழ சீசன் ஆகும். இந்த காலங்களில் கேரளா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், கோயம்பத்துார், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.அங்கிருந்த மொத்த வியாபாரிகள் ஆண்டுதோறும் வந்து பலாப்பழங்களை மொத்தமாக வாங்கிச் செல்வர்.உள்ளூர் வியாபாரிகள், பலா மரங்களை விவசாயிகளிடம் குத்தகைக்கு எடுத்து, அறுவடை செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வர். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால், பலாப்பழம் விற்பனை முற்றிலும் பாதித்தது. வெளியூர்களுக்கு பலாப்பழங்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.இதனால், நன்கு பழுத்த பலாப்பழங்கள் மரத்திலேயே அழுகி வீணாகியது.அதையடுத்து, கடலுார் மாவட்ட வேளாண் துறை சார்பில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கு ஓரளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டது.இந்நிலையில், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் பலாப்பழம் அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கொரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வெளியூர் வியாபாரிகள் வரவில்லை.இதனால், பலாப்பழங்கள் மரத்திலேயே வீணாகி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சேடப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'ஊரடங்கு காரணமாக பலாப்பழங்களை வாங்க வெளியூர் வியாபாரிகள் யாரும் வரவில்லை. அதையும் மீறி சில இடங்களில் கூடுதல் கூலி கொடுத்து ஆட்களை வரவழைத்து, பலாப்பழங்களை அறுவடை செய்தோம்.அந்த பழங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், சுற்றுப்பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம். ஆனாலும், முழுமையாக விற்பனையாவதில்லை. ஆயிரக்கணக்கில் பலாப்பழங்கள் மரத்திலேயே வெடித்து, அழுகி வருகின்றன.இதனால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே பலாப்பழங்களை அறுவடை செய்யவும், இங்கிருந்து தடையின்றி வெளி மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்ல, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X