ரூ.40 லட்சம்: முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம்...கடலூர் மாவட்ட போலீசார் நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
05:01

கடலுார்- கடலுார் மாவட்டம் முழுதும் முகக் கவசம் அணியாதோர், சமூக இடைவெளியை கடைபிடிக்காதோர் மீது வழக்குப் பதியப்பட்டு, 40 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.



கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி 39ஆக இருந்த கொரோனா தொற்று, நேற்று முன்தினம் 366 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 3ம் தேதி 381, 4ம் தேதி 305, 5ம் தேதி 296, 6ம் தேதி 366 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 4ம் தேதி ஒரே நாளில் மட்டும் 7 பேர் இறந்துள்ளனர். நேற்று முன்தினம் வரை இறப்பு எண்ணிக்கை 343 ஆக உள்ளது. தொற்று பாதிப்பு 32 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.இதற்கிடையே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, காய்ச்சல் முகாம்களை அதிகரிப்பது, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்வது என, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதே போல், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு, மதியம் 12:00 மணி வரை காய்கறி, மளிகை கடைகள் திறப்பு என புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் செல்வோர், சமூக இடைவெளியே கடைபிடிக்காதோருக்கு எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுதும் போலீசார் அபராதம் விதித்து, வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.அதன்படி முகக் கவசம் அணியாதோருக்கு 200 ரூபாயும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. மாவட்டம் முழுதும், கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட 7 காவல் கோட்டங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 18,983 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 384 பேர் மீதும் வழக்குப் பதிந்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை முகக் கவசம் அணியாதோர், சமூக இடைவெளியை கடைபிடிக்காதோருக்கு 39 லட்சத்து 88 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.



தொடர்ந்து முகக் கவசம் அணியாதோர், சமூக இடைவெளியை கடைபிடிக்காதோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அபராதம் விதித்து வருகின்றனர். இதில், நேற்று முன்தினம் மட்டும் முகக் கவசம் அணியாத 840 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 99 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டு, 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதே போல், நேற்று முன்தினம் ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 26 பேர் மீது வழக்குப் பதிந்து, இரண்டு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X