கொரோனா நோயாளிகள் 15 பேர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
05:30

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், 24 மணி நேரத்தில், 15 கொரோனா நோயாளிகள், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர், மாவட்ட மருத்துவமனையில், சிறப்பு வார்டில் சிகிச்சை பெறுகின்றனர். இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளில், 15 பேர், கடந்த, 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர்.நோயாளிகள் பீதிபாலுசெட்டிசத்திரம், கீழம்பி, காஞ்சிபுரம், குன்றத்துார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நான்கு ஆண், 11 பெண் என, 15 பேர் இறந்தது, அங்கிருந்த நோயாளிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.இறந்தவர்களின் உறவினர்கள் கூறியதாவது:ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான், மூச்சுத்திணறி அவர்கள் இறந்தனர். தவிர, ஆக்சிஜன் செல்லும் குழாயில், அளவு மாறியதால் இறந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஆக்சிஜன் அளவை சரிபார்க்க பயன்படுத்தும் கருவி பற்றாக்குறையாக இருக்கிறது. போதிய மருத்துவ உபகரணங்கள் வைத்து, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஆக்சிஜன் படுக்கைகள் விபரம் குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது:காஞ்சிபுரம் மருத்துவமனையில் இறந்த நபர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை. அவர்களுக்கு ஏற்கனவே, நுரையீரல் பாதிப்பு அதிகமாக இருந்தது தான் காரணம்.புகார்அரசு மருத்துவமனையில், மொத்தம், 672 படுக்கைகள் உள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, 375 படுக்கைகள் பயன்படுகின்றன. இதில், ஆக்சிஜன் வசதி உடைய படுக்கைகள், 260.ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், காலியாக உள்ள பட்சத்தில், நோயாளிகளை அங்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனை கல்லுாரிகளில், 1,180 படுக்கைகள், கொரோனா சிகிச்சை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளன.மாவட்டத்தில் பெருகிவரும் நோய் தொற்றை கட்டுப்படுத்த, மேலும், 350 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை, ஒரு வார காலத்திற்குள் தயார் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது.ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக, 145 ஆக்சிஜன் படுக்கைகள், 10 நாட்களுக்குள் தயார் செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.காஞ்சிபுரம் மருத்துவமனையில், 'ரெம்டெசிவர்' மருந்து, ஆக்சிஜன் முக கவசம், புளோ மீட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளன. மேலும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு, 'பிபிடி கிட்' எனும், பாதுகாப்பு கவச உடைகளை, நகராட்சி நிர்வாகம் வழங்குவதில்லை எனவும், புகார் எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X