'தொழில் போட்டி காரணமாக அ.தி.மு.க., நபரை கொன்றோம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
05:30

செங்கல்பட்டு-அ.தி.மு.க., பிரமுகரை, தொழில் போட்டிக்காரணமாக கொலை செய்ததாக, முக்கிய கொலையாளி, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.செங்கல்பட்டு அடுத்த, மறைமலை நகர் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் திருமாறன், 50; அ.தி.மு.க., பிரமுகர். கடந்த மாதம், 24ம் தேதி, குடும்பத்தினருடன், அதே பகுதி முத்துகுமாரசுவாமி கோவிலுக்குச்சென்ற இவரை, ரவுடிகள் சிலர், வெடிகுண்டு வீசி கொலை செய்தனர்.இக்கொலை வழக்கு சம்பந்தமாக, மறைமலை நகர் ராஜேஷ், 48, உள்ளிட்ட, 11 பேர், திருச்சி, கள்ளக்குறிச்சி நீதிமன்றங்களில், 28ம் தேதி சரணடைந்தனர். அவர்களை, போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்க, மறைமலை நகர் போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் இரண்டில், இம்மாதம், 5ம் தேதி மனு அளித்தனர்.இம்மனுவை விசாரணை செய்த நீதிபதி, இரண்டு நாட்கள் விசாரணை நடத்த, போலீசாருக்கு, அனுமதி அளித்தனர். 11 பேரிடம், போலீசார் விசாரணை செய்து, நேற்று முன்தினம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.இக்கொலை தொடர்பாக, முக்கிய கொலையாளி ராஜேஷ், போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:திருமாறனும், நானும், தனியார் நிறுவனங்களுக்கு, ஆட்கள் அனுப்பும் தொழில் செய்துவந்தோம். இந்த தொழிலில், எனக்கு சேர வேணடிய பணத்தை, அவர் தரவில்லை. பல முறை கேட்டும் தராததால், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதனால், ஆத்திரமடைந்து, 2016ம் ஆண்டு, அவரை, கொலை முயற்சித்தபோது தப்பிவிட்டார். ஏப்., 24ம் தேதி, நண்பர்களுடன் சேர்ந்து, அவரை கொலை செய்தேன்.இவ்வாறு, அதில் கூறிஉள்ளார்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X