தினமலர் செய்தியால் கொரோனா சிகிச்சை மையமான நீதிமன்றம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
தினமலர் செய்தியால் கொரோனா சிகிச்சை மையமான நீதிமன்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 மே
2021
09:21

திண்டுக்கல் : தினமலர் செய்தி எதிரொலியால் திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.



திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. பாதிப்புக்குள்ளாகும் 200 க்கும் மேற்பட்டோரில் 75 சதவீதம் பேர் திண்டுக்கல்வாசிகளாக உள்ளனர்.தினமும் பாதிப்பு அதிகமாவதால் படுக்கை தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளது. இந்நிலையில் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள பழைய நீதிமன்றத்தை கொரோனா வார்டாக மாற்றலாம் என மே 1, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.



முதற்கட்டமாக 180 படுக்கைகளுடன் மையம் தயாராகியுள்ளது. நோயாளிகளை அனுமதித்து சிகிச்சையும் அளிக்கின்றனர். அரசு மருத்துவகல்லுாரி அருகில் உள்ளதால் தேவையானவற்றை உடனடியாக கொண்டு வந்து சிகிச்சை அளிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X