பயணிகள் குறைவால் சிறப்பு ரயில்கள் ரத்து | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பயணிகள் குறைவால் சிறப்பு ரயில்கள் ரத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 மே
2021
09:31

திண்டுக்கல் : பயணிகள் வருகை குறைவால், தெற்கு ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.



கொரோனா பரவல் தினமும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த சில நாட்களாக ரயில்களில் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் தெற்கு ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.



சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில் (வண்டி எண் 02636), சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில், தேஜஸ் சொகுசு ரயில், தாம்பரம் - நாகர்கோவில் (வண்டி எண் 06191), திருநெல்வேலி - பாலக்காடு (வண்டி எண் 06791) சிறப்பு ரயில் இன்று (மே 8) முதல் மே 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.இதே போல் வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில், வண்டி எண் 02606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில், நாகர்கோவில் - தாம்பரம் (வண்டி எண் 06192), பாலக்காடு - திருநெல்வேலி (வண்டி எண் 06792 )சிறப்பு ரயில்கள் மே 9 முதல் ஜூன் 1 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X