'பாசிட்டிவ்' ஆனவர்களே... பயப்படாதீங்க! தீவிர அறிகுறிகள் இருந்தால் 'அட்மிட்' ஆகலாம்: பிறர் வீட்டில் சிகிச்சை பெற்றே குணமடையலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

09 மே
2021
02:06
பதிவு செய்த நாள்
மே 08,2021 23:27

கோவை:கொரோனாவுக்கான பரிசோதனையில், 'பாசிட்டிவ்' ஆன அனைவரும் மருத்துவமனையில் அட்மிட் ஆகத் தேவையில்லை; அருகில் உள்ள நோய் தொற்று அறியும் மையங்களுக்கு சென்றால், தேவையான வழிகாட்டுதல்கள் கிடைக்கும். ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், அங்குள்ள டாக்டரின் ஆலோசனை பெற்று, வீட்டில் இருந்தே குணமடையலாம் என்று நம்பிக்கையூட்டுகின்றனர் டாக்டர்கள்.


கோவையில் கொரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் உயிர் பயத்தில் மருத்துவமனைகளில் திரள்கின்றனர். லேசான பாதிப்பு உள்ளவர்கள், வீட்டில் இருந்தபடியே மருந்து உட்கொண்டால் குணமாகி விடலாம் என, டாக்டர்கள் அறிவுறுத்தினாலும், அச்சத்தில் பலர் மருத்துவமனைகளை நாடுகின்றனர்.ஆனால், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில், படுக்கை வசதி இல்லை.அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆக, ஆக, புதிய நோயாளிகள் அட்மிட் செய்யப்படுகின்றனர்.டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை இ.எஸ்.ஐ., மருத்துவமனை டாக்டர்கள் சிலர் கூறுகையில், 'இங்கு, 220 டாக்டர்கள் இருக்க வேண்டும்; 150 டாக்டர்களே உள்ளனர். 300 நர்சுகள் இருக்க வேண்டிய இடத்தில், 110 பேர் மட்டுமே உள்ளனர். இங்கு இருந்த பல செவிலியர் பணி மாறுதல் ஆகி போய் விட்டனர். அந்த பணியிடங்கள் மீண்டும் நிரப்பப்படவில்லை.இருக்கும் நர்சுகள், ஐந்து நாட்கள் பணி செய்து விட்டு, ஐந்து நாட்கள் ஓய்வு எடுக்கின்றனர். அதனால் பலர் பணி சுமை காரணமாக, கடும் மன அழுத்தத்தில் உள்ளனர். நோய் தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவ பரிசோதனை ஆய்வுக்கூடங்களிலும், ஸ்கேன் மையங்களிலும் போதிய தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லை. ஒரு நாளைக்கு, 1500 முதல் 2000 பேருக்கு சி.டி., ஸ்கேன் எடுக்கப்படுகிறது.தினமும் பல ஆயிரம் பேருக்கு, தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. இருக்கும் பணியாளர்களே தொடர்ந்து பல மணி நேரம் பணி செய்வதால், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


இது குறித்து, இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் ரவீந்திரனிடம் கேட்டதற்கு,''போதிய அளவு டாக்டர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள் உள்ளனர். பணியில் எந்த தடங்கலும் இல்லை. ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து தேவையான அளவு உள்ளது. எந்த குறையும் இல்லை. எல்லாம் சரியாக இருக்கிறது,'' என்றார்.''தினமும் ஆயிரத்துக்கும் மேல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனை வாசலில் காத்து கிடக்கிறார்களே...,'' என்று கேட்டோம்.அதற்கு அவர் கூறியதாவது:இங்கு வருபவர்கள் பெரும்பாலும், ஜஸ்ட் பாசிட்டிவ். அவ்வளவுதான். பாசிடிவ் என்பது நோய் அல்ல. பாசிடிவ் ஆன பிறகு அறிகுறிகள் அதிகரித்தால்தான் சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை எடுத்தால் போதும். எல்லோரும் அட்மிஷன் தேவையில்லை


எல்லோருக்கும் சி.டி.ஸ்கேன் தேவையில்லை. கடுமையான காய்ச்சல், இருமல், சளி இருந்தால் மட்டும்தான் ஸ்கேன் தேவை. இதையெல்லாம் டாக்டர்கள் சொன்னால், நோயாளிகள் கேட்பதில்லை. பாசிடிவ் ஆன எல்லோரும், அச்சத்தில் இங்கு வந்து அட்மிஷன் கேட்கின்றனர். சிடி ஸ்கேன் எடுக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.


இப்படி ஒரு நாளைக்கு, 1000 பேருக்கு மேல் வருகின்றனர். இருப்பதே, 600 படுக்கைகள்தான். எல்லோரையும் எப்படி அட்மிட் செய்யமுடியும். தொற்று பாதிப்பு அதிகமாகி, உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் நோயாளிகளை என்ன செய்வது.மக்கள் அச்சப்படத் தேவையில்லை. எல்லோரும் அட்மிட் ஆக வேண்டியதில்லை. சூழ்நிலையை புரிந்து கொண்டு, டாக்டர்கள் சொல்வதை கேட்க வேண்டும். பாசிடிவ் ஆனவர்கள் மாநகராட்சி தொற்றின் தன்மை அறியும் மையங்களுக்கு சென்று, டாக்டர்கள் ஆலோசனையின்படி நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


பாசிடிவ் என்பது நோய் அல்ல. பாசிடிவ் ஆன பிறகு அறிகுறிகள் அதிகரித்தால்தான் சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டில் தனிமையில் இருந்தால் போதும். எல்லோருக்கும் சி.டி.ஸ்கேன் தேவையில்லை. கடுமையான காய்ச்சல், இருமல், சளி இருந்தால் மட்டும்தான் ஸ்கேன் தேவை. 'வீட்டுத்தனிமையே போதும்'மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ராஜா கூறுகையில், ''மாநகராட்சி சார்பாக மட்டுமல்ல, தனியார் மருத்துமனைகள் சார்பாகவும், தொற்றின் தன்மை அறியும் மையங்கள் (Triage) செயல்படுகின்றன. லேசான அறிகுறி இருப்பவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் வசதி இல்லை என்றால், பாரதியார் பல்கலை, கொடிசியா போன்ற இடங்களில் உள்ள, கொரோனா கேர் சென்டர்களில் சேரலாம். பாதிப்பு அதிகம் என்றால் இஎஸ்ஐ, அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல, அங்குள்ள டாக்டர்களே பரிந்துரை செய்வார்கள்.நோயாளிகள் வீணாக பீதி அடையத் தேவையில்லை,'' என்றார். 'பாதி சிகிச்சையில் வரக்கூடாது'கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வித நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கிறோம்.இருக்கும் இடத்தில் எவ்வளவு படுக்கைகள் போட முடியுமோ, அந்த அளவுக்கு போட்டு டிரீட்மென்ட் பார்க்கிறோம். ஆக்சிஜன் போதிய அளவு இருக்கிறது. நல்ல முறையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் கொரோனா நோயாளிகள், அங்கேயே முழுமையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இடையில் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடாது. பலர் அப்படி வருகின்றனர். பணியாளர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண, ஆட்கள் எடுக்கச்சொல்லி உத்தரவு வந்துள்ளது. ஆகவே, மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மே-202105:01:53 IST Report Abuse
ஆப்பு பயப்படாதீங்க... பயப்படாதீங்கன்னு சொல்லியே பீதியைக் கிளப்புறாங்க. வெளியே இஷ்டத்துக்கு சுத்துனா கொரோனா வரும்னு பயம் இருக்கணும். அப்பத்தான் கொரோனா கட்டுக்குள் வரும். பாசிடிவ்வா? பயப்படாதீங்க... அப்பிடின்னா ஊரைச் சுத்திட்டு பாசிடிவ்வோடு வருவாங்க. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. அஞ்சாமை அஞ்சுவது அறிவிலார் செயல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X