பரமக்குடியில் சுகாதார மாவட்டத்தில் 10 நாளில் 617 பேருக்கு பாதிப்பு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பரமக்குடியில் சுகாதார மாவட்டத்தில் 10 நாளில் 617 பேருக்கு பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 மே
2021
23:49

பரமக்குடி,:பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 617 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 23 நாட்களில் 13 பேர் இறந்துஉள்ளனர்.பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்துார்,நயினார்கோவில், போகலுார் ஆகியவற்றை உள்ளடக்கிய பரமக்குடி சுகாதார மாவட்டத்தில், ஏப்., 27 தொடங்கி மே 6 வரை 617 பேர் தொற்றால் பாதித்துள்ளனர். பரமக்குடி நகராட்சியில் மட்டும் தொற்று பாதிப்பு 300யை நெருங்கியுள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி, பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் தலா 100 பேர், ராமநாதபுரத்தில் 65, சிவகங்கை 13, மதுரை 3, தனியார் மருத்துவமனைகளில் 35, மற்றும்வீட்டு கண்காணிப்பில் 269 பேர் உள்ளனர். மேலும் 20 பேர் வரை இருப்பிடம் அறியப்படாமல் உள்ளது.பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 154 பேர் வரை பாதித்துஉள்ளனர். மார்ச் 15 தொடங்கி மே 8 வரை 956 பேருக்கு தொற்று பாதித்ததில்13 பேர் இறந்துள்ளனர்.அரசு வழிகாட்டுதல் படி, அத்தியாவசிய தேவைக்கு மட்டும் குடும்பத்தில் ஒருவர் வெளியே செல்வதை தவிர, அனைவரும்வீட்டில் இருப்பது அவசியமாகிறது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X