மருத்துவமனையை சுற்றி கடைகள்அகற்ற முடியாது நகராட்சி திணறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
00:03

விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவமனையை சுற்றிலும் கடைகளை நடத்திட அனுமதி வழங்கிய நெடுஞ்சாலைத்துறையால், கடைகளை அகற்ற முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறுகிறது.விருதுநகர் அரசு மருத்துவமனையொட்டிய - அருப்புக்கோட்டை ரோடு, மல்லாங்கிணர் ரோடுகளை நெடுஞ்சாலைத்துறை பராமரிக்கிறது. நெடுஞ்சாலை ஆய்வாளர்கள் சிலரின் சிபாரிசின் பேரில் சாலையோரம் கடைகள் நடத்திட நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியது. இதனால் அரசு மருத்துவமனையை சுற்றிலும் புற்றீசல் போல் ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி உணவகங்கள் முளைத்தன. அகலமான சாலை குறுகி போக்குவரத்துக்கு நெரிசலை ஏற்படுத்துகிறது.கொரோனா பரவல் தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனையை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்துக்கு கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து நகராட்சி கமிஷனர் ஜெகதீஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள் ரவி, சிவராமன், ஹென்றி டேவிட் குழுவினர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்ற பெட்டி கடைகளை அகற்ற அத்துறை அனுமதி கிடைக்காததால் அதை அகற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது.நகராட்சி கமிஷனர் ஜெகதீஸ்வரி: நெடுஞ்சாலைத்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் அகற்றப்படும், என்றார்.நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தங்க அழகர் ராஜன் : ஆவின் உள்ளிட்ட பெட்டி கடைகளுக்கு மாத வாடகை படி தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் பரிந்துரைப்படி இக்கடைகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும், என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X