ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா; 5 பேர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
00:08

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் ஐந்து பேர் பலியாகினர்.298 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் 1665 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2வது அலையில் மட்டும் 4681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள 770 படுக்கைகளில் 285 பேர், தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள 1436 படுக்கைகளில் 166 ,தனியார் மருத்துவமனைகளில் 425 படுக்கைகளில் 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தத்தில் மாவட்டத்தில் 2631 படுக்கைகளில் 1967 காலியாக உள்ளன. 959 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெறுகின்றனர்.அரசு மருத்துவமனைகளில் 302 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட படுக்கையில் 50 , தனியார் மருத்துவமனையில் 91 ல் 57 பேரும் உள்ளனர். நேற்று மட்டும் 2151 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களுக்கான முடிவுகள் இன்று தெரிய வரும். 1,45,363 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 49,069 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். 9820 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 58 பகுதிகள் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.கலெக்டர் கண்ணன்: மாவட்ட மருத்துவ கிடங்கில் போதிய அளவில் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. தேவை குறித்தும் மாநில அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியாகும் சிலிண்டர்களை துாத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி ஆக்சிஜன் நிரப்பப்பட்டு மீண்டும் மருத்துவக்கிடங்கிற்கு கொண்டுவரப்படுகிறது, என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X