விவசாய இடுபொருள் விற்கும் கடைகளுக்கு தளர்வு கிடைக்குமா | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
விவசாய இடுபொருள் விற்கும் கடைகளுக்கு தளர்வு கிடைக்குமா
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 மே
2021
00:31

நத்தம்,:விதிகளில் தளர்வு அளித்து விவசாய இடுபொருள் கடைகளை திறக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.அத்தியாவசிய தேவையான உயிர்காக்கும் மருந்து கடை, பெட்ரோல் பங்க் போன்றவற்றுக்கும், கொரோனா கட்டுப்பாட்டில் அதிக நேரம் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்கும் முழுநேர தளர்வு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் உணவு தேவைகளில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான பூச்சி மருந்து, உரம் போன்ற விவசாய இடு பொருட்கள் கிடைத்தால் மட்டுமே விளைச்சலை உருவாக்கி உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியும். இல்லையெனில் அவற்றின் விலை அதிகரிக்கும்.நத்தம், கோபால்பட்டி, செந்துறை பகுதிகளில் சில்லரை இடுபொருள் கடைகள் மதியம் 12:00 மணி வரை செயல்படுகின்றன. திண்டுக்கல் நகரில் மொத்த விற்பனை கடைகளை திறக்க அனுமதி மறுப்பதாக தகவல் உள்ளது.மாவட்டத்தின் பிற பகுதிகளில் சிறு கடைகள் செயல்பட்டு இருப்பு தீர்ந்து விட்டால் இடுபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இதனால் பயிர்கள் பாதிக்காது இருக்க, உரம் மற்றும் பூச்சி மருந்து கடைகளை வழிகாட்டு விதிமுறைப்படி திறக்க அனுமதிக்க வேண்டும், என்று எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X